fbpx

மீண்டும் அதிகரிக்கிறதா கொரோனா..? சென்னை விமான நிலையத்தின் திடீர் உத்தரவால் பரபரப்பு..

சென்னை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றின் ஆரம்பத்தில் இருந்தே சென்னை விமான நிலையத்தில் பயணிகள், ஊழியர்கள், விமான நிலையத்துக்கு வருபவர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமல்படுத்தப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளால், கொரோனா வைரஸ் பாதிப்பு, நாடு முழுவதும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், சென்னை விமான நிலையத்தில் முககவசம் அணிபவர்கள், சமூக இடைவெளி கடைபிடிப்பது போன்ற கொரோனா கட்டுப்பாடுகள் கடைபிடிப்பது பெருமளவு குறைந்து வருகின்றன. மேலும் சென்னை விமான நிலைய நிர்வாகம், பயணிகளை எச்சரிக்கும் விதமாக, சென்னை விமான நிலையம் உள்நாட்டு முனையம் மற்றும் வெளிநாட்டு முனையங்கள் உள்ள பகுதிகளில் ஸ்டிக்கர்களை ஒட்டி உள்ளனர். அதோடு, சென்னை விமானநிலைய ட்விட்டா் பக்கத்திலும் அறிக்கை வெளியிட்டுள்ளனா்.

மீண்டும் அதிகரிக்கிறதா கொரோனா..? சென்னை விமான நிலையத்தின் திடீர் உத்தரவால் பரபரப்பு..

அதில், ”கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முழுமையாக நீங்கவில்லை. இதனால் சென்னை விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்படுகிறது. எனவே விமான பயணிகள், விமான நிலையத்துக்கு வருபவர்கள், விமானநிலைய ஊழியா்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு, அனுமதி இல்லை. விமான பயணிகள் அனைவரும், பயண நேரம் முழுமையும் கண்டிப்பாக முகக்கவசத்தை முறையாக வாய், மூக்கு மூடியிருக்கும் விதத்தில் அணிந்திருக்க வேண்டும். சில பயணிகள் முகக்கவசம் தொடா்ந்து அணிவதால், சுவாச பிரச்சனை போன்றவைகள் ஏற்படலாம். அப்படிப்பட்ட பயணிகள் முறையான அனுமதிபெற்று முகக்கவசம் விலக்கு பெற்றுக் கொள்ளலாம்.

மீண்டும் அதிகரிக்கிறதா கொரோனா..? சென்னை விமான நிலையத்தின் திடீர் உத்தரவால் பரபரப்பு..

மற்றவர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாதவர்கள் மீது கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிமுறை சட்டத்தின்படி, அபராதம் மற்றும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் தண்டனை சட்டத்தின்படி, அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும். எனவே, பயணிகள் அனைவரும் முககவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி போன்றவைகளை, விமான நிலையத்தில் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Chella

Next Post

இந்தியாவிலேயே இந்த நகரத்தில் தான் குறைவான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன..

Tue Aug 30 , 2022
இந்தியாவில் உள்ள 19 பெருநகரங்களில், கொல்கத்தாவில் தான் கடந்த ஆண்டு மிகக் குறைவான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) சமீபத்திய அறிக்கையிக் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் 11 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் டெல்லியில் 1,226 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன – இது நாட்டிலேயே மிக அதிக எண்ணிக்கையாகும்.. டெல்லியைத் தொடர்ந்து […]

You May Like