சீனாவின் வுகான் நகரில் சட்ட விரோதமாக விற்கப்பட்ட ரக்கூன் நாய்களிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்றும் அதற்கான மரபணு சான்றுகள் கிடைத்துள்ளதாகவும் சர்வதேச நிபுணர்கள் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று, முதன்முறையாக சீனாவின் வூஹானில், 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் தோன்றியது. படிப்படியாக உலகம் முழுவதும் பரவிய இந்த பெருந்தொற்றின் காரணமாக கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்தநிலையில், பேரிடர் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்றில் இருந்து இன்னும் முழுமையாக மக்கள் மீண்டுவராத நிலையில், சீனா தான் கொரோனா வைரஸ் பரப்பியதாக பலநாடுகளும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றன. 2021ம் ஆண்டு அமெரிக்காவின் தேசிய உளவு அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில், சீனாவின் வூஹானில் உள்ள பரிசோதனை மையத்தில் இருந்தே கொரோனா வைரஸ் பரவல் துவங்கியிருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், எப்படி பரவல் துவங்கியது என்பது குறித்த முழுமையான தகவல் இதுவரை கிடைக்கவில்லை.
இந்தநிலையில், வூகான் நகரில் தொற்று பாதிப்பு ரக்கூன் நாய்களிடம் இருந்து கொரோனா பரவையிருக்கலாம் என்று சர்வதேச நிபுணர்கள்குழு தெரிவித்துள்ளது. உகான் நகரில் உள்ள கடல் உணவுபொருட்கள் சந்தையில் ரக்கூன் நாய்கள் சட்ட விரோதமாக விற்கப்பட்டதாகவும் அந்த வகையான நாய்களிடம் இருந்து கொரோனா பரவியிருக்கலாம் என்றும் அதற்கான மரபணு சான்றிதழ்கள் கிடைத்து இருப்பதாகவும் சர்வதேச நிபுணர்கள் வெளியிட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், ரக்கூன் நாய்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதா? அல்லது மனிதர்களுக்கு இந்த நாய்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவியதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் வன விலங்குகளிடம் இருந்து தான் வைரஸ் பரவியிருக்கலாம் என்று சூழ்நிலையை சுட்டிக்காட்டுவதாக அமைந்து இருப்பதாகவும் ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.