fbpx

தாயின் நஞ்சுக்கொடி மூலம் பரவிய கொரோனா!… 2 குழந்தைகளுக்கு மூளை பாதிப்பு!… அமெரிக்க ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

தாயின் நஞ்சுக்கொடிக்குள் ஊடுருவி கொரோனா வைரஸ் தாக்கியதில் 2 குழந்தைகளுக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019இல் பரவிய கொரோனா வைரசால் உலகம் முழுவதும் மிக மோசமாகப் பாதிப்பை சந்தித்தன. இதனிடையே தற்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது ஒரு பக்கம் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இதற்காக அச்சப்படத் தேவையில்லை என்றே ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். மறுபுறம் என்னதான் கொரோனாவுக்கு நாம் வேக்சின் கண்டுபிடித்தாலும் கூட ஒப்பீட்டளவில் அது புதிய ஒரு வைரஸ் தான். எனவே, கொரோனா ஏற்படுத்தும் நீண்டகால பாதிப்பு குறித்து ஆய்வுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்தநிலையில், தாயின் நஞ்சுக்கொடிக்குள் ஊடுருவி, கொரோனா வைரஸ் தாக்கியதில் மூளை பாதிப்புடன் 2 குழந்தைகள் பிறந்துள்ளதாக அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். பீடியாட்ரிக்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, தடுப்பூசிகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாத 2020 ஆம் ஆண்டில் டெல்டா வகை வைரஸ் பரவலின் போது இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இருவரும் 3-6 மாதங்கள் கர்ப்பமாக இருந்த போது அவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதன்பின், பிறந்தவுடனே இரு குழந்தைகளும் வலிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், முறையான வளர்ச்சி இல்லாமல் இருந்துள்ளது. ஒரு குழந்தை 13 மாதங்களில் உயிரிழந்த நிலையில், மற்றொன்று மருத்துவர்கள் பராமரிப்பில் வைக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இரண்டு குழந்தைகளும் கொரோனா உறுதியாகவே இல்லை. இருந்த போதிலும் அவர்கள் ரத்தத்தில் அளவுக்கு அதிகமான கொரோனா ஆன்டிபாடிகள் இருந்தாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, இந்த கொரோனா முதலில் தாயிடம் இருந்து நஞ்சுக்கொடிக்கு (placenta) வந்துள்ளது. அதன் பிறகு அது குழந்தைக்குப் பரவியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 13 மாதங்களில் உயிரிழந்த குழந்தையின் பிரேதப் பரிசோதனையிலும் அந்த குழந்தையின் மூளையில் வைரஸின் தடயங்களையும் நேரடி தொற்று காயங்களையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அந்த இரு இளம்பெண்களுக்கும் கர்ப்பமாக இருந்த போதே கொரோனா ஏற்பட்டுள்ளது. முதல் நபருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தது.. அந்த பெண்ணுக்குக் கர்ப்ப காலம் முழுமையாக இருந்துள்ளது. மற்றொரு தாய்க்கு வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்தது. மருத்துவர்கள் 32 வாரங்களில் குழந்தையை எடுக்க வேண்டி இருந்தது.

பச்சிளம் குழந்தைகளின் மூளையில் ஏற்படும் பாதிப்பு டெல்டா வேரியண்டால் மட்டுமே ஏற்படுகிறதா அல்லது அனைத்து வகையான கொரோனாவாலும் ஏற்படுமா என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை என்று கூறிய ஆய்வாளர்கள், கர்ப்பமாக இருக்கும் போது கொரோனா பாதிப்பு இருந்தால், மருத்துவர்களிடம் வளர்ச்சி தாமதங்கள் குறித்து ஆய்வு செய்யும்படியும் அறிவுறுத்தியுள்ளனர். குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் வரை, அதாவது ஏழு அல்லது எட்டு வயது வரை தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், குழந்தையைப் பெற்றுக் கொள்ள விரும்பும் பெண்கள் முன்கூட்டியே வேக்சின் எடுத்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தியுள்ளனர்.

Kokila

Next Post

ரஹானேவின் அதிரடி ஆட்டம்!... தோனி சொன்ன அந்த ஒத்த வார்த்தை!... மும்பையை வீழ்த்த இதுதான் காரணமாம்!...

Mon Apr 10 , 2023
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்ற நிலையில், போட்டிக்கு முன் ரஹானேவை ஊக்கப்படுத்தியது குறித்து தல தோனி கூறியுள்ளார். ஐபிஎல் 16வது சீசனின் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த 12-வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த வீரரும் பெரிய இன்னிங்ஸ் ஆடாததால் அந்த அணி 20 ஓவரில் வெறும் 157 ரன்கள் மட்டுமே அடித்தது. 158 ரன்கள் என்ற […]

You May Like