fbpx

மீண்டும் தீயாய் பரவும் கொரோனா..!! சென்னை, கோவையில் அதிகரிப்பு..!! மக்களே உஷார்..!!

தமிழ்நாட்டில் 3 அலைகளாக பரவி பல லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்று, கடந்த ஓராண்டாக கட்டுக்குள் இருந்தது. இரண்டரை ஆண்டுகளாக இயல்பு வாழ்க்கையை இழந்த மக்கள், கடந்த ஓராண்டாகத்தான் கொரோனாவின் அச்சத்திலிருந்து மீண்டெழுந்துள்ளனர். இந்நிலையில், மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அதன்படி தாய்லாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தோனேசியாவைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் ஜேஎன்1 வகை கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்த வகை வைரஸ் மிக விரைவாக ஒருவரிடமிருந்து மற்றொருக்கு பரவும் என்றும் இணை நோயாளிகள், முதியோர், குழந்தைகள், கர்ப்பிணிகள், எதிர்ப்பாற்றலை குறைக்கும் சிகிச்சை பெறுபவர்களுக்கு பாதிப்புகளை அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 25க்கும் மேற்பட்டோருக்கு புதிய வகை தொற்று உறுதிபடுத்தப்பட்ட நிலையில், மாநில அரசுகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத் துறை வழங்கியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழ்நாட்டில் இதுவரை ஜேஎன்.1 வகை தொற்று யாருக்கும் உறுதிபடுத்தப்படவில்லை. புதிய வகை பாதிப்பு ஏற்பட்டாலும், அதனை எதிர்கொள்ளத் தேவையான கட்டமைப்பு இங்குள்ளது. தொற்று பரவல் அதிகரிக்கும் இடங்களில் பரிசோதனைகளை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, கோவை மாவட்டங்களில் வரும் நாட்களில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்படவுள்ளன. மாநிலத்தில் தேவையான எண்ணிக்கையில் ஆர்டி பிசிஆர் உபகரணங்கள் உள்ளன. புதிய வகை கொரோனா தொற்றைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. நோய்த் தடுப்பு விதிகளை முறையாக கடைபிடித்தால், பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ளலாம். பொது இடங்களில் முகக் கவசம் அணிவதையும், தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும், அடிக்கடி சோப் மூலம் கைகழுவுவதையும் வழக்கமாக்கி கொள்ள வேண்டும்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

JN.1 வகை கொரோனாவுக்கு தடுப்பூசி அவசியமா..? மத்திய அரசு பரபரப்பு அறிக்கை..!!

Mon Dec 25 , 2023
ஜே.என். 1 வகை கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பல நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. ஜே.என்.1 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்றும் இதற்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது. இந்தியாவிலும் தினசரி கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், நாடுகள் கண்காணிப்பு […]

You May Like