தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் தேதியை மாற்றி உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே நவம்பர் 18 மற்றும் நவம்பர் 19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தீபாவளி விடுமுறையை ஈடு செய்ய அன்றைய நாள் வேலை நாள் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நவம்பர் 25 மற்றும் நவம்பர் 26 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய இம்மாதம் இறுதிக்குள் அந்தந்த தாலுக்கா அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.