fbpx

கர்ப்பிணிகள் உயிரிழிந்த பிறகு ஆவணங்களில் திருத்தம்..! ராஜாஜி மருத்துவமனையில் அரங்கேறிய கொடூரம்..! வெளியான அதிர்ச்சி தகவல்..!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 3 மற்றும் 7ஆம் தேதிகளில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் செம்மலர் மற்றும் குப்பி ஆகியோர் மருத்துவரின் கவனக்குறைவால் உயிரிழந்துள்ளனர். கர்ப்பிணிகள் உயிரிழப்பு குறித்து ஆட்சியர் சங்கீத உத்தரவின் பேரில் தணிக்கை நடத்தப்பட்டது, இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்த தணிக்கையில், கர்ப்பிணிகள் இரண்டு பேருக்கும் உரிய சிகிச்சை வழங்காமல், அவர்கள் உயிரிழந்தப்பிறகு சிகிச்சை ஆவணங்களில் திருத்தம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்ப்பிணிகள் இறந்த பிறகு செயற்கை சுவாசம் அளித்துள்ளதும் தெரியவந்துள்ளது. கர்ப்பிணி செம்மலருக்கான சிகிச்சை ஆவணத்தில், கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி இதய சிகிச்சை நிபுணரை அழைத்ததாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 நாட்கள் ஆஸ்பிரின் மாத்திரை கொடுக்கப்பட்டதும் அழிக்கப்பட்டுள்ளது. மேலும் வாந்தி எடுத்ததால் வயிறு வீங்கியுள்ளது என்று, புதிதாக எழுதப்பட்டுள்ளது.

மற்றொரு கர்ப்பிணியான குப்பி இறந்த பிறகே, இதயத்துடிப்பு குறித்த தகவல் மற்றும் சிகிச்சையின் போது கொடுக்கப்பட்ட மருந்துகள் மற்றும் விவரங்களை சிகிச்சை ஆவணத்தில் எழுதியிருப்பது தணிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும் மத்திய அரசின் திட்டத்தின் படி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு முகாம்கள் நடத்த வேண்டும். ஆனால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் யாரும் முகாமில் பங்கேற்காததும் தணிக்கையில் தெரியவந்துள்ளது.

தணிக்கையில் கிடைத்த தகவலின் படி கர்ப்பிணிகள் உயிரழப்புக்கு காரணமான, தவறு செய்த மருத்துவர்கள் மற்றும் ஆவணங்களில் திருத்தம் மேற்கொண்டவர்களை பணியிடைநீக்கம் செய்ய அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வருக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

மருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிகள் உயிரிழந்ததும், அதை மறைக்க, மருத்துவர்கள் ஆவணத்தில் திருத்தம் செய்யப்பட்டதும் பொதுமக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதிரி அவலம் ஏற்படக்கூடாது என்பதற்காக தான் சிலர் கடன் வாங்கியாவது தனியார் மருத்துவமனையில் சேருகின்றனர். நிறைய சம்பளம் வாங்கும் அரசாங்க மருத்துவர்கள் தங்களின் பணிகளை செய்யாமல் அவரவர் சொந்தமாக கிளினிக் வைத்து கல்லா கட்டி வருகின்றனர். சாமானியன் தவறு செய்தால் பாயும் சட்டங்களும் இது போல அரசு அதிகாரிகள் தவறு செய்தால் அமைதியாக இருப்பது தொடர்ந்துகொண்டே தான் வருகிறது.

Kathir

Next Post

மக்களே ரெடியா!… அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ஆஃபர்!… நாடு முழுவதும் அக்.8 முதல் தொடக்கம்!

Mon Oct 2 , 2023
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ வரும் 8 முதல் தொடங்குகிறது. பிரைம் உறுப்பினர்களுக்கு 24 மணிநேரம் முன்னதாகவே தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “எங்கிருந்தும், எந்த நேரத்திலும் ஷாப்பிங் செய்ய, பலவிதமான கட்டண தேர்வுகள் மற்றும் விரும்பும் மொழியில் வழங்கிவரும் அமேசான், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சலுகைகளை வழங்கியுள்ளது. அமேசான் பே லேட்டர் மூலம் ஷாப்பிங் செய்து அடுத்த மாதம் பணம் செலுத்தும் வகையில் ரூ.1 லட்சம் வரை உடனடி கிரெடிட் […]

You May Like