fbpx

மக்களே…! நவம்பர் 1-ம் தேதி சபைக் கூட்டங்கள் நடைபெறும்…! பகுதி பிரச்சினை விவாதிக்க உத்தரவு…!

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற உள்ளாட்சிகள் தினமான 01.11.2023 அன்று காலை 11.00 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கிராம சபைக் கூட்டங்களில் கீழ்க்காணும் பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும்.

நவம்பர் 1-ஆம் நாளினை தமிழகத்தின் உள்ளாட்சிகள் தினமாகக் கொண்டாடப்படும் என அறிவிப்பு செய்து, அதனை சிறப்பிக்கும் விதமாக கிராம சபை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு உத்தரவு வழங்கிய மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தல், கொரோனா பெருந்தொற்று காலம் முதல் தற்போது முடிவடைந்த நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சிறப்பாக சேவை புரிந்த தூய்மைக் காவலர்கள் உள்ளிட்ட தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கௌரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து விவாதிக்கப்படும்.

மேலும் வீட்டு வரி / சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, தொழில் உரிமக் கட்டணம், மனைப்பிரிவு அங்கீகாரம் மற்றும் கட்டட அனுமதி போன்றவை தற்போது இணையவழி செலுத்தும் முறை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது குறித்து விவாதித்தல் மற்றும் இதர பொருட்கள் தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு விவாதிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

நடப்பாண்டின் கடைசி சந்திர கிரகணம்!… 1 மணிநேரம் 19 நிமிடங்களுக்கு நீடித்தது!… அடுத்து எப்போது நிகழும்?

Sun Oct 29 , 2023
நடப்பாண்டி கடைசி சந்திர கிரகணம் அக்.28,29 தேதிகளில் நிகழ்கிறது. அந்தவகையில் இன்று அதிகாலை பகுதிநேர சந்திர கிரகணம் ஒரு மணி நேரம் 19 நிமிடங்களுக்கு நீடித்தது. முழு நிலவு நாளில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்போது, சந்திர கிரகணம் ஏற்படும். இந்த முழு நிலவின் மேல் பூமியின் நிழல் படும்போது முழு சந்திர கிரகணம் ஏற்படும். அதேபோல் சந்திரனின் ஒரு பகுதியின்மேல் பூமியின் […]

You May Like