திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பள்ளிக்குள் மாணவர்கள் முன்னிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அவிநாசியில் அரசுப் தொடக்கப் பள்ளியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் 60க்கும்மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அப்பகுதியில் குடியிருக்கும் பாஸ்கரன் என்பவர் குப்பைகளை கொட்டி வந்துள்ளார் இதை கண்டித்து தலைமை ஆசிரியர் அவரிடம் கேட்டுள்ளார். இந்த பிரச்சனையில் பாஸ்கரன் என்பவர் மாணவர்களை தாக்கியுள்ளார். பின்னர் அவர் அதே பகுதியில் கவுன்சிலர் ரமணி என்பவர் அவரது கணவர் துறை . இவர் பாஸ்கரனுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார்.
பள்ளிக்கு வந்த துறை தலைமை ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நாங்கள் அப்படித்தான் குப்பையை கொட்டுவோம் என கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் கடும் வார்த்தை மோதல் நடந்துள்ளது. இந்நிலையில் அவர் தலைமை ஆசிரியர் செந்தாமரைக் கண்ணன் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.