fbpx

வரும் 20ம் தேதிமுதல் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு!… மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவிப்பு!… முழுவிவரம் இதோ!

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான முதற்கட்ட கலந்தாய்வு வரும் ஜூலை 20ம் தேதி தொடங்கும் என மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு ஜூலை 20 – செப். 30ம் தேதி வரை 4 சுற்றுகளாக நடைபெறும். எம்.பி.பி.எஸ் ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 27, 28ம் தேதி ஆன்லைனில் நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 16, 17ம் தேதிகளில் நடத்தப்பட்டு ஆகஸ்ட் 18ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். 3ம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 6, 7ம் தேதிகளில் நடத்தப்பட்டு செப்டம்பர் 8ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். மேலும், வரும் 16-ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உட்பட அனைத்து மாநில மருத்துவ கல்லூரிகளுக்கும் 15% இடங்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும், சேர்க்கை மையங்கள் வாயிலாகவும் கலந்தாய்வில் பங்கேற்கலாம். தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர இதுவரை 40,193 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு தேதியை விரைவில் மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

Kokila

Next Post

ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு...! Diabetes உள்ள பள்ளி மாணவர்களை கண்காணிக்க வேண்டும்...!

Sat Jul 15 , 2023
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ அனுப்பி உள்ள கடிதத்தில்‌, “பன்னாட்டுடயாபெடிஸ்‌ அமைப்பின்‌ அறிக்கையில்‌, உலக அளவில்‌ இந்தியாவில்‌ அதிக அளவு குழந்தைகள்‌ மற்றும்‌ வளர்‌ இளம்‌பருவத்தினர்‌ வகை-1 நீரிழிவு குறைபாட்டினால்‌ பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய குழந்தைகள்‌ தங்கள்‌ வாழ்நாள்‌ முழுவதும்‌ ஒவ்வொரு நாளும்‌ இன்சுலின்‌ மருத்தினை ஊசி வழியே செலுத்துதல்‌, நாள்தோறும்‌ ரத்த சர்க்கரை அளவைக்‌ கண்காணித்தல்‌ உள்ளிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. […]

You May Like