இந்தியாவின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் K.M செரியன். இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட செரியனுக்கு வயது முதிர்வு காரணமாக திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் பெங்களூரில் உள்ளதொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு 11 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அவருடைய மகள் சந்தியா உறுதிப்படுத்தியுள்ளார். அவரின் இறுதிச்சடங்கு வரும் வியாழக்கிழமை நடைபெறும் என்று அவரது மகள் சந்தியா செரியன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் எவரும் செய்யாத அரியதொரு மருத்துவ சாதனையாக, ஏற்கெனவே மூளைச்சாவு அடைந்த நோயாளியிடமிருந்து இதயத்தை எடுத்து அதனை இதய மாற்ரு அறுவைச் சிகிச்சை தேவைப்படும் நபருக்கு பொருத்தி வெற்றிகரமாக அறுவைச் சிகிக்சையை செய்து காட்டிய பெருமைக்குரியவராவார். இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார்.
கடந்த 1990 முதல் 1993 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியின் கௌரவ சிகிச்சை நிபுணராகவும் இருந்துள்ளார். அவரது மறைவு மருத்துவத்துறையில் ஈடு செய்ய இயலாததொரு பேரிழப்பாகப் பார்க்கப்பகிறது. பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் அவரது குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Read more : குடியரசு தினம் ஜனவரி 26ம் தேதி கொண்டாடுவது ஏன்..? சுவாரஸ்யமான வரலாற்று உண்மை