இந்தியாவில் பொது இடங்களில் காதலர்கள் ஒருவர் மற்றவரிடம் அநாகரிகமாக நடத்து கொள்வது சமூகத்தாலும், சட்டத்தாலும் தவறானதாகவே பார்க்கப்படுகிறது. இவ்வாறு நடந்து கொள்வது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகவும் காணப்படுகிறது. இருப்பினும் நிழலிடங்கள், பூங்காக்கள், நகரும் பேருந்துகள், கடற்கரைப்பகுதிகள் போன்ற பல இடங்களில் காதல் ஜோடிகள் சுற்றியுள்ள சமூகத்தையும் மறந்துவிட்டு, தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதுபோன்ற ஒரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. நவி மும்பை நகர போக்குவரத்து கழகம் (NMMT) இயக்கும் ஏசி (AC) பேருந்தில், 20 வயதுக்கு உட்பட்ட இளம் ஜோடிகள் உடலுறவு கொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து நடத்துனர் மீது நவி மும்பை மாநகராட்சி (NMMC) துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளது.
போதுமான அளவு விழிப்புடன் இல்லாததற்காகவும், தம்பதியினர் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காகவும் பேருந்து நடத்துனர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நகராட்சி போக்குவரத்து பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தம்பதியினரின் செயலை நிறுத்தத் தவறியதற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக விளக்குமாறு நடத்துனரிடம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை ஆர்வலர் அனார்ஜித் சவுகான் தெரிவித்தார்.
பேருந்தின் பின்புற ஜன்னல் அருகே அமர்ந்திருந்த போது, அவர்கள் செய்த செயல் அருகிலிருந்த வாகனத்தில் பயணித்த ஒருவர் பதிவு செய்தார். அந்த காணொளி இணையத்தில் பரவி, மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பான்வேல்-கல்யாண் சென்ற அந்த பேருந்தில் கூட்டம் இல்லாததால் பின் இருக்கையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. டிராப்பிக்கில் நின்றபோது பைக்கில் வந்த இளைஞர் இதை கவனித்ததுடன் வீடியோ எடுத்து போஸ்ட் செய்துள்ளார். இதனை தட்டிக் கேட்காத பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read more: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் வேலை.. 212 காலிப்பணியிடங்கள்..!! – விண்ணப்பிக்க ரெடியா..?