fbpx

’தம்பதிகளே’..!! ’அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்’..!! நாட்டு மக்களுக்கு அதிபர் வலியுறுத்தல்..!!

நேட்டோ படைகளின் விரிவாக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளால் ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக படை வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையில் அந்நாடு ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, 2 ஆண்டுகளாக நடைபெறும் உக்ரைன் போரில் 3 லட்சம் ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அத்துடன், 1999-களில் இருந்தே ரஷ்யாவின் பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது. அந்த நாட்டின் மக்கள் தொகை 2021ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 14.34 கோடியாக உள்ளது. மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருவதால், வரும் காலங்களில் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால், ரஷ்ய அதிபர் புதின் அந்த நாட்டு மக்கள் குறைந்தது 8 குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதுகுறித்து கடந்தாண்டு இறுதியில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலக ரஷ்ய மக்கள் கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய புதின், “நம் முன்னோர்கள் 4 – 5 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொண்டு, வலுவான தலைமுறையைச் சேர்ந்த குடும்பங்களை உருவாக்குவது என்பது பாரம்பரிய வழக்கமாக இருந்தது. நமது மூதாதையர்கள் 8 அல்லது அதற்கு மேலான குழந்தைகளை பெற்றெடுத்தனர் என்பதை ரஷ்ய குடும்பங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்த சிறந்த மரபுகளைப் பாதுகாக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

ரஷ்யா தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென அதிபர் புதின் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு தம்பதி இரண்டு குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒரு தேசமாக வாழ, ஒரு குடும்பத்திற்கு குறைந்தது இரண்டு குழந்தைகளாவது இருக்க வேண்டும். ஒரே ஒரு குழந்தை இருந்தால், எங்கள் மக்கள் தொகை குறையும்” என தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 10 பேர் பலி..!! ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர்..!!

Sat Feb 17 , 2024
விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே பட்டாசு ஆலையில் இன்று (பிப்.17) பிற்பகல் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பெண்கள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர். பேன்ஸி ரக பட்டாசுகளுக்கு மருந்து வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி […]

You May Like