திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பி மேட்டூர் பகுதியில் சேர்ந்தவர் ராஜ்குமார்(29) இவரது மனைவி சாரதா(20) இவர்கள் சோபனபுரத்தில் விஜயசேகரன் என்பவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே காட்டிலின் தம்பதிகள் இருவரும் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் நேற்று காலை இருவரும் தலை கழுத்து போன்ற பகுதிகளில் விட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இந்த பயங்கர சம்பவத்தை அந்த வழியாக சென்ற நபர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆகவே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலமாக கிடந்த தம்பதிகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் தம்பதிகள் அணிந்திருந்த நகைகளோ, அல்லது அவர்களின் வீட்டில் இருந்த பொருட்களோ எதுவும் காணாமல் போனதாக தெரியவில்லை. இந்த நிலையில் தான் காதல் திருமணம் செய்ததால் இந்த கொலை நடைபெற்றதா? அல்லது தொழில் போட்டியின் காரணமாக, தம்பதிகள் இருவரும் கொலை செய்யப்பட்டார்களா? என்ற விதத்தில் காவல்துறையினர் விசாரணை தொடங்கி இருக்கின்றனர். இளம் தம்பதிகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.