fbpx

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிப்பு..!!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைதாகினார். அவரை 28ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அமலாக்கத்துறை காவல் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை மேலும் 7 நாட்கள் நீட்டிக்கக் கோரிய அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மேலும் 4 நாட்களுக்கு கெஜ்ரிவாலின் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம், இவ்விவகாரத்தில் டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க முடியும், நீதிமன்றம் எவ்வாறு, இதில் தலையிட முடியும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Read More : Senthil Balaji | புதிய மனு..!! செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறைக்கு பறந்த உத்தரவு..!!

Chella

Next Post

Pension Hike | செம குட் நியூஸ்..!! தமிழ்நாட்டில் ஓய்வூதியம் உயர்வு..!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Thu Mar 28 , 2024
தமிழ்நாட்டின் சமூக நலத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் சிறப்பு ஓய்வூதியத்தை உயர்த்த அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சமூக நலத்துறை பிறப்பித்த அரசாணைக்கு எதிராக ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதிய தொகையை ரூபாய் 2,000 என நிர்ணயித்து 3 ஆண்டுகளுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஓய்வூதிய தொகையை உயர்த்த வேண்டும் என்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியதாகவும், ஏப்ரல் […]

You May Like