fbpx

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 16-வது முறையாக நீட்டிப்பு..!! நீதிபதி அல்லி உத்தரவு..!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 16-வது முறையாக நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலாக்கத்துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15-வது முறையாக, ஜனவரி 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதேபோல் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி 3-வது முறையாக மனுதாக்கல் செய்திருந்த நிலையில், நீதிபதி அல்லி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 16-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 14ஆம் தேதி கைதான செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து, ஜனவரி 29ஆம் தேதி வரை அவரது காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chella

Next Post

வீடியோ | ராமர் கோவில் "கட்டுமான தொழிலாளர்கள்" மீது மலர்கள் தூவிய பிரதமர் மோடி.!

Mon Jan 22 , 2024
அயோத்தி நகரில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்று முடிந்திருக்கிறது . இந்திய மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்த ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு சடங்குகளுடன் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார் பிரதமர் மோடி. நூற்றாண்டு சிறப்புமிக்க இந்த நிகழ்வில் 7,000-திற்கும் அதிகமான சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் […]

You May Like