fbpx

‘கோவிஷீல்டு மட்டுமில்லை.. கோவாக்சின் கூட பக்க விளைவுகளை ஏற்படுத்தும்..!’ – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்ட 30% க்கும் அதிகமானோர் 1 வருடத்திற்குப் பிறகு உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டனர் என்று பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு ரத்த உறைதல் ஏற்படலாம் என்ற அறிக்கை வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியைக் கிளப்பியது. இந்நிலையில் இப்போது ‘கோவாக்ஸின் தடுப்பூசி போட்டவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படலாம்’ என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கோவாக்ஸின் தடுப்பூசியை இந்தியாவில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வழங்கி வந்தது. இந்தத் தடுப்பூசி போட்டவர்களுக்கு சில உடல்நல பாதிப்புகள் வரலாம் என பனராஸ் ஹிந்து பல்கலைக்கழகம் கடந்த ஓராண்டாக நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது, “ஆய்வில் பங்கேற்ற 926 பேரில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் பின்தொடர்தல் காலத்தில் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகளை பதிவு செய்துள்ளனர்.  பக்கவாதம் உள்ளிட்ட கடுமையான பக்கவிளைவு ஒரு சதவீத நபர்களில் பதிவாகியுள்ளதாகவும் இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களில் தடுப்பூசியின் நீண்டகால பாதுகாப்பைப் பார்த்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டது. புதிதாகத் தொடங்கிய தோல் மற்றும் அதுதொடர்பான கோளாறுகள், பொதுவான கோளாறுகள் மற்றும் நரம்பு மண்டலக் கோளாறுகள் ஆகியவை தடுப்பூசி பெற்ற பிறகு இளம் பருவத்தினரிடையே காணப்பட்ட மூன்று பொதுவான பாதிப்புகள் “என்று ஜனவரி 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரை நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் கோவாக்ஸின் போட்டுக்கொண்ட 1,024 பேர் கலந்துகொண்டுள்ளனர். இதில் 635 பேர் இளைஞர்கள், 291 பேர் நடுத்தர வயதினர் ஆவர். இளைஞர்கள்10.5 சதவிகிதம் பேருக்கு தோல் சம்பந்தமான நோய்களும், 4.7 சதவிகிதம் பேருக்கு நரம்பு சம்பந்தமான கோளாறுகளும், 10.2 சதவிகிதம் பேருக்கு பொதுவான பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளன.

நடுத்தர வயதினர் 5.8 சதவிகிதம் பேருக்கு தசை சம்பந்தமான பிரச்னைகளும், 5.5 சதவிகிதம் பேருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்னைகளும், 8.9 சதவிகிதம் பேருக்கு பொதுவான பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளன. முக்கியமாக இந்த ஆய்வில் நடுத்தர வயதினருக்கு 1.6 சதவிகிதமும், பெண்கள் மற்றும் அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு 2.8 சதவிகிதமும் உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கருப்பை நார்த்திசுக் கட்டிகளால் பாதிக்கப்பட்ட நடிகை! இணையத்தில் வைரலாகும் வீடியோ..

Next Post

"இந்தியா நிலவில் கால் பதிக்கிறது.. நம் குழந்தைகள் சாக்கடையில் விழுகுது!" - பாகிஸ்தான் எம்.பி ஆதங்கம்

Thu May 16 , 2024
இந்தியா நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கும் போது, நம் நாட்டு குழந்தைகள் சாக்கடையில் விழுந்து உயிரிழக்கும் அவலம் நிகழ்கிறது கொண்டிருக்கிறது என பாகிஸ்தான் எம்.பி., பேசியது வைரல் ஆகி வருகிறது. பார்லிமென்டில் பாகிஸ்தான் முட்டாஹிதா குவாமி இயக்கம் என்ற கட்சி தலைவர் சையத் முஸ்தபா கமல் பேசுகையில், ”ஒரு பக்கம் இந்தியா நிலவில் தரையிறங்கியது குறித்த செய்தி வெளியாகிறது. அடுத்த சில நொடிகளில் கராச்சி குறித்த செய்தி வெளியாகிறது. உலக […]

You May Like