fbpx

பட்டாசு ஆலை விபத்து விவகாரம்..!! உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து அதிரடி உத்தரவு..!!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில், அந்த ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் நாக்பூரில் உள்ள மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) உரிமம் பெற்று இயங்கி வந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான சுதர்சன் பட்டாசு ஆலையில் கடந்த வியாழக்கிழமை வெடிவிபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பான விசாரணையில் ஆலையை விதிமீறி குத்தகைக்கு விட்டது, கூடுதல் பணியாளர்களை கொண்டு மரத்தடியில் வைத்து பட்டாசு உற்பத்தி செய்தது, கடந்த ஓராண்டாக பட்டாசு ஆலை செயல்படாமல் இருந்தது, அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலான அளவு வெடி மருந்துகளை கையாண்டது, தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில் பேன்சி ரக பட்டாசு உற்பத்தி செய்தது போன்ற விதிமீறல்களால் விபத்து நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, பட்டாசு அலையின் உரிமம் 2026ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மத்திய வெடி பொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Read More : PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! இதை செய்தால் ரூ.7 லட்சம் கிடைக்கும்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Chella

Next Post

"ஓய்வு பெற்ற அரசு ஊழியரான தந்தைக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் வசிக்கும் அரசு ஊழியர் HRA கோர முடியாது.." உச்ச நீதிமன்ற உத்தரவு.!!

Sat May 11 , 2024
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆன தந்தைக்கு வழங்கப்பட்ட வாடகை இல்லா வீட்டில் குடியிருக்கும் அரசு ஊழியர் HRA ஹவுசிங் அலவன்ஸ் பெற தகுதியற்றவர் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அரசு ஊழியர் ஒருவரது மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் HRA தொகையை மனுதாரர் அரசாங்கத்திற்கே திருப்பி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். 1992 ஜம்மு […]

You May Like