fbpx

பட்டாசு ஆலை வெடி விபத்து.. ரூ.3 லட்சம் நிதியுதவி.. முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு..

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்..

முதலமைச்சர் ஸ்டாலின் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ விருதுநகர்‌ மாவட்டம்‌, சிவகாசி வட்டம்‌, கீழத்திருத்தங்கல்‌ கிராமத்தில்‌ இயங்கி வரும்‌ பட்டாசு தொழிற்சாலையில்‌ நேற்று காலை எதிர்பாராதவிதமாக எற்பட்ட வெடி விபத்தில்‌ திருத்தங்கல்லைச்‌ சேர்ந்த திரு.ரவி, (வயது 60), என்பவர்‌ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்‌ என்ற செய்தியினை கேட்டு மிகவும்‌ வேதனையடைந்தேன்‌.

மேலும்‌, இவ்விபத்தில்‌ படுகாயமடைந்த அதே பகுதியைச்‌ சேர்ந்த திரு.சாமுவேல்‌ ஜெயராஜ்‌, (வயது 45) என்பவருக்கு அரசு மருத்துவமனையில்‌ சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்‌. இவ்விபத்தில்‌ உயிரிழந்தவரின்‌ குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்‌ ஆறுதலையும்‌ தெரிவித்துக்கொள்கிறேன்.. அவரின் குடும்பத்தினருக்கு
3 லட்சம் ரூபாயும், காயமடைந்தவருக்கு 50,000 ரூபாயும்‌ முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும்‌ உத்தரவிட்டுள்ளேன்‌..” என்று குறிப்பிட்டுள்ளார்..

Maha

Next Post

அட கடவுளே...! இளம் பெண்ணை கற்பழித்து கர்ப்பமாகிய MLA-வின் மகன்...! போலீசார் அதிரடி நடவடிக்கை...!

Fri Jan 20 , 2023
சத்தீஸ்கர் மாநில பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. ஒருவரின் மகன், திருமணத்தை காரணம் காட்டி பல ஆண்டுகளாக தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியதை அடுத்து, அவர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ராய்பூர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சத்தீஸ்கர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், ஜாஞ்ச்கிர் சம்பா எம்எல்ஏவுமான நாராயண் சண்டேலின் மகனான பலாஸ் சண்டேல் மீது புதன்கிழமை கற்பழிப்பு வழக்கு பதிவு […]

You May Like