fbpx

கிரேன் கவிழ்ந்து 4 பேர் பலி..!! கோவில் திருவிழாவில் நடந்த சோகம்..!!

நெமிலி அருகே மயிலார் கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கீழ்வீதி கிராமத்தில் இன்று இரவு மண்டியம்மன் கோயிலில் மயிலேறு திருவிழா நடைபெற்றது. இதில் ஒரு பகுதியாக அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. பக்தர் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் கிரேனில் தொங்கியபடி மாலை அணிவிக்க முயன்றனர். அப்போது, திடீரென கிரேன் நிலைதடுமாறி பக்கவாட்டில் சாய்ந்தது. இதில் 8 பேர் படுகாயங்களுடன் புன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 4 பேரும், அரக்கோணம் அரசு மருத்துவமனையில் 4 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அதில் முத்து (42), பூபாலன் (39) ஐஸ் வியாபாரி ஜோதி (19) கீழ் வாதம் ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிரேன் கவிழ்ந்து 4 பேர் பலி..!! கோவில் திருவிழாவில் நடந்த சோகம்..!!

மேலும், இருவர் திவீர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சின்ன சாமி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நெமிலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயில் திருவிழாவில் நடந்த இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Chella

Next Post

’இந்த தவறை செய்தால் ஓய்வூதியம் கிடைக்காது’..!! அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை..!!

Mon Jan 23 , 2023
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, போனஸ் வழங்கிய பின் தற்போது ஊழியர்களுக்கான 18 மாத நிலுவைத்தொகை வழங்க அரசு பரிசீலிக்கும் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது ஒரு முக்கிய விதியை மாற்றியிருக்கிறது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது. இதை ஊழியர்கள் கடைபிடிக்காமல் புறக்கணிக்கும் பட்சத்தில் அவர்கள் ஓய்வுபெற்ற பின் ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியானது வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புது விதிகளின் […]

You May Like