மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஏரியில் விழுந்து விமானம் நொறுங்கியது.
தான்சானியாவில் ’தர் எஸ் சலாம்’ என்ற நகரில் இருந்து புகோபா நகருக்கு விமானம் புறப்பட்டது. புகோபா விமான நிலையத்தில் தரையிறங்க தயார் நிலையில் இருந்தபோது மோசமான வானிலை நிலவியது. இதன் காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக்கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது.
விமானம் கீழே விழுந்த இடம் ஒரு ஏரி என்பதால் முழு விமானமும் விக்டோரியா ஏரியில் நீரில் மூழ்கியது. உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அக்கம்பக்கத்தில் படகுகள் வைத்திருந்தவர்களும் அங்கு உதவிக்கு வந்தனர். அந்நாட்டு அரசு உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள முடுக்கிவிட்டுள்ளனர். இதையடுத்து முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்த விமானத்தில் சுமார் 49 பேர் இருந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விக்டோரியா ஏரி ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய ஏரிகளில் முதலாவதாக உள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் ’ இன்ற காலை ஒரு துயரமான செய்து ஒன்று பெற்றுள்ளேன். விக்டோரியா ஏரியில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. இதில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆறுதல்கள், உடனடியாக மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைதி காக்க வேண்டுகின்றேன். கடவுள் நமக்கு உதவுவார்.’’ என தெரிவித்திருந்தார்.