நேபாளத்தில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றிய விபத்தில் 68 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேபாளத்தில் உள்ள பொகாராவில் சர்வதேச விமான நிலையம் அருகே Yeti விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஏடிஆர் 72-500 ரக விமானம் தரையிறங்க தயார் நிலையில் பறந்து கொண்டிருந்தது. விமானத்தில் 68 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் உட்பட 72 பேர் பயணம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது விமானம் கட்டுப்பாட்டை இழந்து பலத்த சத்தத்துடன் தரையில் விழுந்து நொறுங்கியது. விமானம் திடீரென தீப்பற்றி எரிந்ததில் அதில் பயணம் செய்த பயணிகளில் இதுவரை 68 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் பயணம் செய்தவர்களில் 5 பேர் இந்தியர்கள் ஆவர். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் தீப்பற்றியதால் அந்த இடம் முழுக்க கரும்புகை சூழ்ந்ந்து கொண்டது. இதனை அடுத்து பொக்காரா விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.