fbpx

‘கிரெடிட் கார்டு’ தொகையை செலுத்த தவறினால் என்ன நடக்கும் தெரியுமா..? முழு விவரம் இதோ..!!

வங்கிகளில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய தேவைக்காக கிரெடிட் கார்டுகளை பெற்றுக் கொள்கிறார்கள். இந்த கிரெடிட் கார்டு என்பது கடன் அட்டை ஆகும். இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி நீங்கள் விருப்பம் போல் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்து கொள்ளலாம். அதேசமயம், கிரெடிட் கார்டில் நிலுவைத் தொகையை வங்கியில் தக்க சமயத்தில் செலுத்த வேண்டும். இல்லையென்றால், அபராதம் விதிக்கப்படும். இருப்பினும் மாத கடைசி என்று வரும்போது சிலரின் கையில் பணம் இல்லாமல் போவதால் நிலுவைத் தொகையை உரிய நேரத்தில் செலுத்த முடியாமல் போகும் சூழ்நிலை ஏற்படலாம்.

இந்நிலையில், கிரெடிட் கார்டுகள் மீது இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை பிறப்பித்துள்ளது. அதன்படி, நீங்கள் கிரெடிட் கார்டில் உள்ள நிலுவைத் தொகையை உரிய நேரத்தில் செலுத்தாவிட்டால் உங்களுடைய கிரெடிட் கார்டு ஆனது கடன் பாக்கி கார்டாக அறிவிக்கப்படும். கிரெடிட் கார்டு விதிமுறைகளின் படி நிலுவைத் தொகையை செலுத்திய தவறிய நாளிலிருந்து, நீங்கள் மீண்டும் செலுத்தும் நாள் வரை அபராதமானது விதிக்கப்படும். ஆனால், நீங்கள் வாங்கிய பணத்திற்கு அபராதம் விதிக்கப்பட மாட்டாது. நிலுவைத் தொகை செலுத்த தவறிய நாட்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும்.

அதன்பிறகு கிரெடிட் கார்டு வழங்குவோர் ஒரு மாதத்திற்கு முன்பாகவே நோட்டீஸ் அனுப்பினால் தான் கட்டணங்களில் மாற்றம் செய்ய முடியும். ஒருவேளை நீங்கள் கிரெடிட் கார்டின் நிலுவைத் தொகையை செலுத்த தவறும்போது விதிக்கப்பட்ட அபராத தொகையானது உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினால், நீங்கள் நிலுவை தொகை மற்றும் அபராத தொகையை முழுமையாக செலுத்திய பிறகு கிரெடிட் கார்டு வேண்டாம் என்று சொல்லிவிடலாம். அதற்கான முழு உரிமையும் வாடிக்கையாளர்களுக்கு உண்டு. அதோடு கிரெடிட் கார்டை வேண்டாம் என்று முடிவு செய்தால், ஆர்பிஐ விதிகளின்படி அதை 7 நாட்களுக்குள் செயல்படுத்த வேண்டும்.

இதைத்தொடர்ந்து வாடிக்கையாளர்களின் விருப்பம் இல்லாமல் கிரெடிட் கார்டின் கடன் தொகையை உயர்த்துவது மற்றும் புதிதாக கிரெடிட் கார்டு வழங்குவது போன்ற நடவடிக்கைகளில் வங்கிகள் ஈடுபடக்கூடாது. கடன் அட்டையில் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்துமாறு வங்கி நோட்டீஸ் அனுப்பும் போது குறைந்தபட்சம் 15 நாட்கள் கால அவகாசம் கொடுக்க வேண்டும். மேலும் கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் கடன் தொகையை செலுத்த தவறினால், வங்கிகள் ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் 500 வீதம் நிலுவைத் தொகையை செலுத்தும் நாள் வரை அபராதமாக விதித்துக் கொள்ளலாம்.

Read more ; ‘மாதம் ரூ.7 லட்சம் வருமானம்.. ஆனா எப்படி செலவு பண்ணுறது?’ ஆலோசனை கேட்கும் பெங்களூர் தம்பதி!!

English Summary

Reserve Bank of India has issued new regulations on credit cards. Accordingly, if you do not pay your credit card balance on time, your credit card will be declared as a delinquent card

Next Post

ஆதாரில் உள்ள பழைய Photo-வை ஆன்லைன் மூலம் ஈஸியா மாற்றலாம்!!எப்படி தெரியுமா?

Tue Jun 18 , 2024
Let's see how to change photo in Aadhaar card.

You May Like