fbpx

கிரிக்கெட் ரசிகர்களே ரெடியா..? உலகக்கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்..!!

ஐசிசி உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்காக 4 லட்சம் டிக்கெட்டுகள் தயாராக உள்ள நிலையில், நாளை முதல் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோலாகலமாக நடைபெறும் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. அதில், இங்கிலாந்து முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதையடுத்து, உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பிசிசிஐ, உலகக் கோப்பை போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தது.

அதன்படி, இந்தியாவில் அக்டோபா் 5ஆம் தேதி போட்டி தொடங்கி நவம்பா் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகள் பங்கேற்கின்றன. கடந்த முறை இறுதி ஆட்டத்தில் மோதிய இங்கிலாந்து-நியூஸிலாந்து அணிகள் அக்.5ஆம் தேதி தொடக்க ஆட்டத்தில் மோதுகின்றன.

இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக சுமார் 4 லட்சம் டிக்கெட்டுகள் தயாராக இருக்கின்றன. ரசிகா்கள், அதிகாரப்பூர்வ இணையத்தில் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’இனி நீங்க நினைக்கிற மாதிரி சிம் கார்டு வாங்க முடியாது’..!! ’வந்தாச்சு புது ரூல்ஸ்’..!! மீறினால் ரூ.10 லட்சம் அபராதம்..!!

Thu Sep 7 , 2023
இன்றைய டிஜிட்டல் உலகில் நாளுக்கு நாள் புதுவகையான மோசடிகள் அரங்கேறி வருகிறது. தொலைதொடர்பு சாதனைகள் பயன்படுத்தி மோசடி செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் வகையில், அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், இனி சிம் வாங்க வேண்டும் என்றால் கட்டாயம் சில விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தொலைத்தொடர்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது, டெலிகாம் ஆபரேட்டர்கள் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன்பாக […]

You May Like