fbpx

உலகக்கோப்பை கிரிக்கெட்..!! ஹர்திக் பாண்டியா இனி விளையாட மாட்டார்..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான 17ஆவது லீக் போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவுக்கு கணுக்கால் பகுதியில் காயம் ஏற்படவே எஞ்சிய இன்னிங்ஸிலிருந்து வெளியேறினார். இதன் காரணமாக நியூசிலாந்திற்கு எதிராக தர்மசாலாவில் நடந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா இடம் பெறவில்லை. இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் விளையாடினார்.

இந்நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. காயத்தில் இருந்து அவர் இன்னும் குணமாகாததால் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இதனால், ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Chella

Next Post

தீபாவளி பண்டிகை..!! அசத்தும் ஆவின் நிறுவனம்..!! சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை..!! என்னென்ன தெரியுமா..?

Thu Oct 26 , 2023
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சார்பில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக காஞ்சிபுரம் – திருவள்ளூர் மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் காக்களூர் பால் பண்ணையின் பொதுமேலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சார்பில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நெய் மைசூர்பா, நெய் லட்டு, காஜு கட்லி, பாதாம் அல்வா, […]

You May Like