fbpx

கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் புதிய வீடு..!! இவ்வளவு பிரம்மாண்டமா..? வைரலாகும் வீடியோ..!!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி, மகாராஷ்டிராவின் கடற்கரை நகரமான அலிபாக் நகரத்தில் சொகுசு வீடு ஒன்றை கட்டியுள்ளார். இதன் பிரத்யேக வீடியோ காட்சியை சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்த நிலையில், தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அண்மையில் நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் சிறப்பாக பேட் செய்து ஆட்ட நாயகன் விருதை வென்றார் விராட் கோலி. கோப்பை வென்று கையோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். இந்திய அணிக்கான பாராட்டு விழா முடிந்ததும் வெளிநாடு சென்றுள்ளார். இந்நிலையில், அலிபாக் வீட்டின் வீடியோ காட்சிகளை அவர் பகிர்ந்துள்ளார்.

இதில் வீட்டின் உட்புறம், வெளிப்புறம் என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அலிபாக், மும்பைக்கு தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. ‘எங்களது அலிபாக் வீட்டைக் கட்டிய இந்த பயணம் உன்னதமானதாக இருந்தது. அனைத்து பணிகளும் முழுமை பெறுள்ளதை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் கனவு இல்லத்துக்கு உயிர் கொடுத்த அவாஸ் குழுவுக்கு மிகப்பெரிய நன்றி. பிரியமானவர்களுடன் இணைந்து இங்கு ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிக்க உள்ளேன்’ என விராட் கோலி பதிவிட்டுள்ளார்.

கடந்தாண்டு பிப்ரவரியில் இந்த சொகுசு இல்லத்தின் கட்டுமான பணி தொடங்கியுள்ளது. டைம்லைன் பாணியில் இந்த வீடியோவில் வீட்டின் அஸ்திவார பணி முதல் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டுமானப் பணி நடைபெற்றபோது கோலியும் அவ்வபோது நேரில் சென்று பார்த்துள்ளார். ‘இந்த திட்டம் குறித்து நான் அறிந்த போது அது தனித்துவமானது என்பது புரிந்தது. இங்கு பிரைவசி கிடைக்கிறது. அதே நேரத்தில் ஹாலிடே வீட்டுக்கு தேவையான அத்தனை அம்சங்களும் இங்கு நிறைந்துள்ளது. நான் எதிர்பார்க்கிற அனைத்தும் இங்கு உள்ளது.

எனக்கு இதில் லிவிங் ஸ்பேஸ் மிகவும் பிடித்துள்ளது. அங்கிருந்து அவுட்டோர் செல்வதற்கான அக்சஸும் எனக்கு பிடித்துள்ளது. அழகியல் சார்ந்து வீட்டின் அமைப்பு உள்ளது. நான் எதிர்பார்ப்பது போலவே இயற்கை ஒளி வீட்டின் உள்ளே வருகிறது. இங்கு எது குறித்தும் கவலை கொள்ளாமல் வசிக்கலாம்’ என கோலி கூறியுள்ளார்.

Read More : கோயிலுக்குள் நுழையும்போது இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!! கண்டிப்பா காரணத்தை தெரிஞ்சிக்கோங்க..!!

English Summary

Indian cricketer Virat Kohli has built a luxury house in the coastal city of Alibaug in Maharashtra.

Chella

Next Post

என்னடா இது..? 35 நாட்களில் 6 முறை பாம்புகளிடம் கடி வாங்கிய இளைஞர்..!! சனி, ஞாயிறு மட்டும் தான் கடிக்குதாம்..!!

Wed Jul 10 , 2024
In the last 35 days alone, a young man has been bitten by poisonous snakes 6 times.

You May Like