குற்றம் நடைபெறாமல் தடுப்பது குறைந்து வருவதாக உயர்நீதிமன்ற நீதிபதி கவலை தெரிவித்துள்ளார்.
தமிழக காவல்துறை ஆயுதப்படை உதவி ஆய்வாளர்களாக உள்ள முத்துக்குமரன், பார்த்திபன், ரமேஷ், வெங்கடேசன் ஆகியோர் சட்டம் ஒழுங்கு பிரிக்கு மாற்றக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தாரர்கள் 40 வயதை கடந்துவிட்டதால் , மூவரும் துறை ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொண்டதாலும் அவர்கள் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்ற முடியாது என்றார்.
நேர்மையானவர்கள், ஒழுக்கமானவர்கள் மட்டுமே சட்டம் – ஒழுங்கு பிரிவில் நியமிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறை டி.ஜி.பிக்கு நீதிபதி உத்தரவு அளித்தார்… மேலும், குற்றம் நடைபெறாமல் தடுப்பது குறைந்துவிட்டதாக கூறி வேதனை அடைந்துள்ள நீதிபதி , சட்டம் –ஒழுங்கு பிரிவு காவலர்கள் , காவல் நிலையத்திலேயே மாமூல் வாங்குவதாக குற்றச்சாட்டு உள்ளது எனவே இதற்கு உயரதிகாரிகள்தான் பொறுப்பு என்றும் கூறினார்..