fbpx

Crime | ஆளில்லாத கடைக்குள் புகுந்த மர்ம கும்பல்..!! தட்டிக்கேட்ட வியாபாரியை வெட்டிப்போட்ட அதிர்ச்சி சம்பவம்..!!

வஉசி மார்க்கெட்டில் வியாபாரியிடம் தகராறு செய்த கும்பல், வியாபாரியை அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Crime | தூத்துக்குடி மாவட்டம் வஉசி மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை வைத்திருப்பவர் சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் திசை கரைராஜா. நேற்றிரவு இவரது கடை அருகே உள்ள கார்த்திக் ராஜா என்பவரது கடைக்கு, திணை வாங்குவதற்காக 6 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. அப்போது, அந்த கடையில் உரிமையாளர் இல்லாததால், அந்த கும்பல் கடையின் உள்ளே சென்று திணையை எடுத்துள்ளனர். இதனைப் பார்த்த திசைகரை ராஜா, அந்த கும்பலிடம் உரிமையாளர் இல்லாதபோது கடைக்குள் எதற்கு சென்று பொருளை எடுக்கிறீர்கள்..? என்று கூறியுள்ளார்.

இதனால், 6 பேர் கொண்ட கும்பல் மற்றும் திசைகரை ராஜா ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வியாபாரி திசை கரை ராஜாவின் தலையில் வெட்டியுள்ளனர். தாக்குதல் நடத்திய ஒரு நபரை வியாபாரிகள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மற்ற 5 பேரும் தப்பியோடியுள்ளனர். தலையில் காயம் அடைந்த வியாபாரி திசை கரைராஜா, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை தொடர்ந்து, தப்பியோடிய கும்பலை கைது செய்ய வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் தகராறில் ஈடுபட்ட கும்பல் வியாபாரியை அறிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : வங்கக் கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை..!!

Chella

Next Post

Crime | ரவுடி மனைவியுடன் உல்லாசம்..!! எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டியா..? இளைஞரை வெட்டி சாய்த்த கும்பல்..!!

Tue May 21 , 2024
Crime | சென்னை புரசைவாக்கம் பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் (26). இவர், வாட்டர் வாஷ் கடையில் பணியாற்றி வந்துள்ளார். இவர், மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி இரவு புரசைவாக்கம் சண்முகராயன் தெருவில் தினேசும் அவரின் நண்பருமான ரவுடி கார்த்திக் மற்றும் ஆகாஷ் ஆகியோர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கொண்ட கும்பல், […]

You May Like