fbpx

’எங்கு பார்த்தாலும் அழு குரல்’..!! உலகை உலுக்கிய நிலநடுக்கம்..!! பலி எண்ணிக்கை 12,000ஆக உயர்வு..!!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கியில் கடந்த 3 நாட்களாக அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் அங்குள்ள நகரங்கள் உருக்குலைந்தன. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தெற்கு துருக்கியில் 3 மாதங்கள் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நிலநடுக்கத்தால் பெரும் பாதிப்புக்குள்ளான துருக்கி துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டனர். நிலநடுக்கத்தின்போது கீழே விழுந்த கண்டெய்னர்களால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி அதிபர் தய்யிப் எர்துகான் மீட்பு பணி மற்றும் நிவாரணக் குழுக்கள் வருவதற்கு தாமதமானதுதான் அதிக உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறியுள்ளார். துருக்கியில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்பொழிவால் மீட்பு பணிகள் தாமதமாவதாகவும் கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ள நிலையில், நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவக் குழுவினருடன் சென்ற
இந்திய விமானப்படையின் 2 விமானங்கள் துருக்கி சென்றடைந்தன. இந்த விமானங்களில், உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் அவசரகால மருந்து பொருட்கள் ஆகியன துருக்கி மற்றும் சிரியாவுக்கு சென்றுள்ளன. துருக்கி மற்றும் இந்தியா ரீதியான நட்பினை உறுதி செய்யும் வகையில், நிவாரண குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதற்கு ‘ஆபரேசன் தோஸ்த்’ என்று பெயர் வைத்துள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

Chella

Next Post

சூப்பர் அறிவிப்பு..!! தொழில் தொடங்க ரூ.17 லட்சம் வரை மானியம்..!! எப்படி விண்ணப்பிப்பது..?

Thu Feb 9 , 2023
கடந்த 2008இல் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் வேளாண் அல்லாத துறைகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் 2017ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை, தமிழ்நாட்டில் 28,789 நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உற்பத்தி சார்ந்த தொழில்கள் தொடங்க ரூ.50 லட்சமும், சேவை சார்ந்த தொழில்கள் துவங்க ரூ.20 லட்சமும் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற […]

You May Like