fbpx

கோப்பையை வென்றால் சிஎஸ்கே சிங்கங்கள் படைக்கப்போகும் மிரட்டலான சாதனைகள்!… என்னென்ன தெரியுமா?

ஐபிஎல் 16வது சீசனின் இறுதிப்போட்டியில் வெற்றிப்பெற்று கோப்பையை வென்றால் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படைக்கப்போகும் சாதனைகள் பட்டியல் குறித்து பார்ப்போம்.

ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே ஆகும். இதற்கு அடுத்தப்படியாக பலம் வாய்ந்த அணி என்று ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் நிரூபித்துள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்று அதிகமுறை கோப்பையை வென்ற அணியாக திகழ்கிறது. தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 4 முறை கோப்பையை வென்று, அதிக முறை ஐபிஎல் டைட்டிலை ஜெயித்த 2வது அணியாக திகழ்கிறது. 2 சீசனை தவிர மற்ற அனைத்து சீசன்களில் பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ள சிஎஸ்கே அணி 10 முறை ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது.

இந்த சீசனிலும் ஃபைனலுக்கு முன்னேறியுள்ள சிஎஸ்கே அணி, குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது. இன்று (மே 28) அகமதாபாத்தில் நடக்கும் ஃபைனலில் சிஎஸ்கே அணி இந்த சீசனிலும் கோப்பையை வென்றால், 5வது முறையாக கோப்பையை வென்று அதிக முறை டைட்டில் ஜெயித்த அணி என்ற மும்பை இந்தியன்ஸின் சாதனையை சமன் செய்யும். இந்த சீசனில் சிஎஸ்கே அணி கோப்பையை ஜெயித்தால் ஐபிஎல் கோப்பையை ஜெயித்த வயது முதிர்ந்த கேப்டன் (41) என்ற சாதனையை தோனி படைப்பார்.ஃபைனலில் ருதுராஜ் கெய்க்வாட் 36 ரன்கள் அடித்து சிஎஸ்கே கோப்பையை வென்றால், ஐபிஎல்லில் கோப்பையை வென்ற அணிக்கு 2 முறை 600 ரன்களுக்கு மேல் பங்களிப்பு செய்த வீரர் என்ற சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் படைப்பார். இதற்கு முன் 2021ல் சிஎஸ்கே கோப்பையை ஜெயித்தபோதும் ருதுராஜ் 600 ரன்களுக்கு மேல் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

இந்தியாவில் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்!... வாட்ஸ் அப் மூலம் பணம் பறிக்கும் கும்பல்!... தடுக்கும் வழிமுறைகள்!

Sun May 28 , 2023
அதிகரித்து வரும் வாட்ஸ் அப் சைபர் குற்ற மோசடியில் இருந்து வாட்ஸ் அப் பயனர்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் சில வழிமுறைகளை பார்க்கலாம். ஆன்லைன், ஸ்மார்ட்போன் வழியாக மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பலருக்கு சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் அல்லது வீட்டில் இருந்து வேலை செய்யும் பணிகள் குறித்த செய்திகள் வாட்ஸ் அப்பில் வலம் வருகின்றன. […]

You May Like