fbpx

அனல் பறக்கப் போகும் CSK, RCB மேட்ச்!! தலை விதியை மாற்றுமா ஆர்சிபி!!

மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டதால் ஹைதராபாத் – குஜராத் ஆகிய அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால், மொத்தமாக 15 புள்ளிகளை பெற்ற ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

17-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வியாழக்கிழமை ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நடைபெறவிருந்தது. இந்த போட்டிக்கு முன்னதாக மழை வெளுத்து வாங்கிய நிலையில், போட்டி டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டதால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால், மொத்தமாக 15 புள்ளிகளை பெற்ற ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

கொல்கத்தா , ராஜஸ்தான் அணிகளை தொடர்ந்து ஐதராபாத் மூன்றாவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதேபோல், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளை தொடர்ந்து, 14 போட்டிகளில் 12 புள்ளிகளை பெற்ற குஜராத் மூன்றாவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் தொடரில் இருந்து வெளியேறியது.

RCB பிளே-ஆஃப்க்கு செல்ல என்ன செய்ய வேண்டும்?

இந்த நிலையில், பிளே ஆஃப் சுற்றில் மீதமுள்ள ஒரு இடத்துக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு மத்தியில் மிகக் கடுமையான போட்டி நிலவுகிறது.
பெங்களூரு அணி பிளே-ஆஃப்க்கு தகுதி பெற, சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். அந்த அணி பிளே-ஆஃப்க்கு தகுதி பெற உள்ள ஒரே வழி, சென்னையை குறைந்தபட்சம் 18 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது 18.1 ஓவர்களில் ( 11 பந்துகள் மீதம் வைத்து) வெற்றி பெறுவதுதான்.

பெங்களூருவின் நெட் ரன்ரேட் +0.387 ஆகவும், சென்னையின் நெட் ரன்ரேட் +0.528 ஆகவும் இருக்கும் நிலையில், வெறும் வெற்றி மட்டும் பெங்களூரு அணிக்கு உதவாது. ஏனெனில் அது அவர்களை ஹைதராபாத் (+0.406) மற்றும் சென்னைக்கு கீழே வைத்திருக்கும்.

தோற்றாலும் சிஎஸ்கே பிளே-ஆஃப்க்கு தகுதி பெறுமா?

ஆம், நிச்சயமாக பிளே-ஆஃப்க்கு தகுதி பெறலாம். அதற்கு சென்னை அணி பெங்களூருவுக்கு எதிராக மோசமான தோல்வியைத் தவிர்க்க வேண்டும். இப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெறும் பட்சத்தில் பிளேஆஃப் சுற்றில் அவர்களுக்கு ஒரு இடம் உறுதியாகிவிடும். அத்துடன், சென்னை அணியால் முதல் 2 இடத்துக்குள் முன்னேறும் சூழல் கூட உள்ளது. அதற்கு, ராஜஸ்தான் கொல்கத்தாவிடம் தோற்க வேண்டும். மேலும், ஹைதராபாத் பஞ்சாபிடம் தோற்க வேண்டும் அல்லது மழை காரணமாக போட்டி கைவிடப்பட வேண்டும்.

இதுஒருபுறமிருக்க, பெங்களூருவில் இன்று நடைபெறும் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டால், அது சென்னை அணி ரசிகர்களுக்கு நல்ல செய்தியாக இருக்கும். அப்படி நடந்தால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்கும். அது பெங்களூரு அணியை சென்னைக்கு கீழே வைத்திருக்கும். ஒருவேளை, சென்னை தோற்றால், தோல்வியின் வித்தியாசம் 17 ரன்களுக்கு அருகில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உதாரணமாக, பெங்களூரு அணி ஸ்கோர் 200 என்றால், சென்னை அணி குறைந்தபட்சம் 182 ரன்களை எடுக்க வேண்டும். பெங்களூரு சேசிங் செய்தால் 18.1 ஓவர்களுக்குள் தோல்வியடையாமல் இருப்பதை சென்னை உறுதி செய்ய வேண்டும். இது சென்னை அணியின் நெட் ரன்ரேட்டை பெங்களூருவுக்கு மேலே வைத்திருக்க உதவும். நடப்பு சாம்பியனான சென்னை மீண்டும் பிளே-ஆஃப்க்கு திரும்புமா? அல்லது கடைசி 5 போட்டிகளில் அதிரடியாக வெற்றிகளை குவித்து வரும் பெங்களூரு அதன் ஆதிக்கத்தை தொடர்ந்து பிளே-ஆஃப்க்கு முன்னேறுமா? என்பதை பார்க்க சுவாரசியமாக இருக்கும்.

Read More: தமிழகமே…! வீட்டிற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம்…! அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய தகவல்…!

Baskar

Next Post

ஓசி பஸ்-ல தான போறீங்க!… விமர்சிக்கும் சக அமைச்சர்களை ஏன் கண்டிக்கவில்லை!… அண்ணாமலை பதிலடி!

Sat May 18 , 2024
Annamalai: இலவச பேருந்து வெற்றிகரமான திட்டம் என்று கூறும் அமைச்சர் தியாகராஜன், அத்திட்டத்தை, ‘ஓசி’ என்று விமர்சித்த சக அமைச்சர்களை ஏன் கண்டிக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி,’சில அரசியல் கட்சிகள் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை அளித்துள்ளன. இதனால், மெட்ரோ ரயில் பயணியரின் எண்ணிக்கை சரிந்துள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு, தமிழக அமைச்சர் […]

You May Like