சிஎஸ்கே அணியை தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக கோரிக்கை விடுத்துள்ளது..
தமிழக சட்டப்பேரவையில் விளையாட்டு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.. அப்போது பாமக எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரன், சிஎஸ்கே அணியை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.. இதுதொடர்பாக பேசிய அவர் “ தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தும் ஒருவரை கூட சிஎஸ்கே அணி செய்யவில்லை.. ஆனால் தமிழர்களே இல்லாமல் தமிழக அணி என்பது போல் விளம்பரம் செய்து தமிழக மக்களிடம் இருந்து பெரும் வர்த்தக லாபத்தை அடைகின்றனர்.. எனவே தமிழர்களே இல்லாத சிஎஸ்கே அணியை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்..” என்று தெரிவித்தார்..
எனினும் பாமகவின் இந்த கோரிக்கைக்கு தமிழக அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை. தற்போது ஐபிஎஸ் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் பாமகவின் இந்த கோரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.. கடந்த 2008 ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளநிலையில், தற்போது 16வது சீசன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதிலிருந்து அதிரடிக்கும் சரவெடிக்கும் பஞ்சமில்லாமல் போட்டிகள் நடைபெற்றுவருகிறது.
அதில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடர்களில் எப்போதும் கவனிக்கத்தக்க அணியாக இருந்து வருகிறது.. 2016, 2017ஆம் ஆண்டுகளில் மட்டும் சூதாட்ட புகார் காரணமாக சென்னை விளையாடவில்லை. பின்னர் 2018-ல் சிஎஸ்கே கம்பேக் கொடுத்தது.. ஐபிஎல் சாம்பியன்ஷிப் பட்டத்தை 4 முறை சிஎஸ்கே அணி வென்றுள்ளது.. அதிக முறை ஐபிஎல் பிளேஆஃப் சுற்று இறுதி சுற்று போட்டிகளில் விளையாடிய அணி என்ற சாதனையையும் சிஎஸ்கே கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..