fbpx

CSKvsRCB: 174 ரன்கள் இலக்கு..! தெறிக்கவிட்ட அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் ஜோடி..!

cskவிற்கு 174ரன்கள் இலக்கு நிர்னயித்துள்ளது RCB.

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன், தொடக்க விழாவில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், டைகர் ஷெஃராப் ஆகியோரின் நடன நிகழ்ச்சி சோனு நிகம் மற்றும் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் மற்றும் பின்னணி பாடகர் மோகித் சவுகான், நீதி ஆகியோரின் இசை நிகழ்ச்சி என கோலாகல கொண்டாட்டத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.

17ஆவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி களமிறங்கியா துவாக்க ஆட்டக்காரர்களான டூபிளெஸ்ஸி மற்றும் விராட் கோலி ஜோடி சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது.

பெங்களூரு அணி 41 ரன்கள் எடுத்தபோது அதிரடி பேட்ஸ்மேன் டூபிளெஸ்ஸி 35 ரன்கள் (23 balls) எடுத்திருந்த போது முஸ்தபிஸுர் ரஹ்மான் பந்துவீச்ஸ்ல் விக்கெட்டை இழந்தார், அவரை தொடர்ந்து வந்த ரஜத் படிதரம், மற்றும் மேக்ஸ்வெல் ரன்கள் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை இழந்தனர். பின்னர் விராட் கோலி 21 ரன்கள், கேமரூன் கிரீன் 18 ரங்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.

ஒரு கட்டத்தில் பெங்களூரு அணி 78 ரன்கள் இருந்தபோது 5 விக்கெட்டை இழந்து பெரும் சிக்கலில் இருந்தது. அதன் பிறகு அனுஜ் ராவத் மற்றும் தினேஷ் கார்த்திக் ஜோடி வெறித்தஜனமான் ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.இறுதியில் அனுஜ் ராவத் 48 ரன்கள்(25 balls) எடுத்தபோது விக்கெட்டை இழந்தார். தினேஷ் கார்த்திக் 38 ரன்கள்(26 balls)எடுத்திருந்தார். இருபது ஓவர் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது.

csk தரப்பில் முஸ்தபிஸுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளும், தீபக் சஹர் 1 விக்கெட்டும் எடுத்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.

Also Read: விடுதலையாகிறாரா செந்தில் பாலாஜி..? வரும் 28ஆம் தேதி முடிவு..!! நீதிபதி அதிரடி..!!

Kathir

Next Post

Biggest donors: தேர்தல் பத்திரங்கள்!… எந்த கட்சிக்கு யார் அதிகம் கொடுத்தார்கள்?… முழு விவரங்கள்!

Sat Mar 23 , 2024
Biggest donors: சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றத்தால் ரத்துசெய்யப்பட்ட தேர்தல் பத்திரம் திட்டத்தில், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் யார் யாரிடமிருந்து எவ்வளவு நிதி வாங்கியுள்ளன? என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. ’ உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்க, நாட்டின் மிகப்பெரிய பொது வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, கட்சிகள் மற்றும் அவர்கள் பணப் பட்டுவாடா செய்த பத்திரங்களின் புதிய தரவுத்தொகுப்பை கடந்த வியாழக்கிழமை வெளியிட்டது. இந்தியத் தேர்தல் […]

You May Like