இன்று முதல் கடலூர் மாவட்டத்தில் மீனவர்களுக்கு மீன் பிடிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஏராளமான மீனவர்கள் கடலூர் மாவட்டத்தில் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். அங்கிருக்கும் மீன்பிடி துறைமுகங்களில் அன்றாட ம் விசைப்படகுகளின் மூலம் கடலுக்குச் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வருவார்கள்.
இத்தகைய சூழலில் வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக கடந்த நவம்பர் 9ஆம் தேதியிலிருந்து மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டு இருந்தது
இதை அடுத்து கடலூர் மாவட்டத்தில் இருக்கும் தினசரி இழுவை விசை படகுகள் மற்றும் நாட்டு படக்குகளை கொண்டு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லலாம் என்று மீன்வளத்துறை அனுமதி கொடுத்துள்ளது. வரும் நவம்பர் 16ஆம் தேதி வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்துள்ளது.
ஆகவே தங்கு கடல் விசை படகுகளுக்கு மீன் பிடிக்க அனுமதி கிடையாது என்று மீன்வளத் துறையினர் தெரிவித்து இருக்கின்றனர். நவம்பர் 16ஆம் தேதிக்குள் மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.