கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஆர் எஸ் மணி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி 31 மெக்கானிக்கான இவரும் எல் என் புரம் பகுதியைச் சேர்ந்த ரம்யா (29) என்பவரும் கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் ரம்யா கர்ப்பம் அடைந்த நிலையில், கர்ப்பத்தை கலைத்தால் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி ரம்யாவின் கர்ப்பத்தை கலைத்துள்ளார் சுப்பிரமணி.
அதோடு சென்ற 22ஆம் தேதி விழுப்புரத்தில் உள்ள குலதெய்வ கோவிலில் வைத்து ரம்யாவை திருமணம் செய்து கொண்டுள்ளார் சுப்பிரமணி பிறகு விழுப்புரத்தில் அரை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த நிலையில், சுப்ரமணிக்கு கடலூரைச் சேர்ந்த வேரொரு பெண்ணுடன் திடீரென்று நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, நேற்று காலை திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது.
இதனைத் தெரிந்து கொண்ட ரம்யா, பண்ருட்டி அனைத்து மகளிர் காலநிலையத்தில் புகார் வழங்கியுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியை தீவிரமாக தேடி வந்த நிலையில், திருமணத்தை தடுத்து நிறுத்த கோரி பண்ருட்டியில் இரவு முழுவதும் காதலன் வீட்டு முன்பு அமர்ந்து ரம்யா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அதையும் மீறி திருவந்திபுறத்தில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் ஒரே சமயத்தில் நடைபெற்று வந்ததால் ஒவ்வொரு திருமணமாக சென்று அவரை தேடிவந்த நிலையில், அதற்குள் சுப்பிரமணிக்கு திருமணம் முடிந்து விட்டது.
ஆகவே மணக்கோலத்தில் கோவிலிலிருந்து வெளியே வந்த சுப்பிரமணியை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர் அதன் பிறகு அவரிடம் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.