fbpx

’’கியூட்’’ தேர்வு முடிவுகள் வெளியானது…

புதிய கல்விக் கொள்கையின்படி மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு ’கியூட்’ முடிவுகள் வெளியாகி உள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகள் புதிய கல்விக் கொள்கையின்படி நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய பல்கலைக்கழங்களில் கலை மற்றும் அறிவியல் மற்றும் வர்த்தகம், வணிக மேலாண்மை துறைகளில் சேரவும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கும் நுழைவுத் தேர்வாக கியூட் (CUET) நடத்தப்படுகின்றது .

இந்தத் தேர்வில் தேர்ச்சியடைந்தால் பல்கலைக்கழகங்களில் படிக்கும் வாய்ப்பை மாணவர்கள் பெற முடியும். 50 தேர்வு மையங்களில் இளநிலை , முதுநிலை படிப்புகளுக்கான தேர்வுகள் 6 கட்டங்களாக நடத்தப்பட்டன. நாடு முழுவதிலும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் 90 பல்கலைக்கழகங்களில் கலை சார்ந்த பட்டப்படிப்புகளில் சேர்வதற்காக விண்ணப்பித்திருந்தனர். 9 லட்சம் மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.

தமிர் , ஆங்கிலம் உள்பட 13 இந்திய மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே தேசிய தேர்வு முகமை அறிவித்த முதுநிலை படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. http://cuet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக முடிவுகளை தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Next Post

85 டாலருக்கும் கீழ் குறைந்துள்ளது கச்சா எண்ணெய் விலை…

Mon Sep 26 , 2022
இந்தியாவின்பொருளாதார வளர்ச்சிக்கு எரிபொருளின் விலையை நிர்ணயிக்கும் கச்சா எண்ணெய் விலை 85 டாலருக்கும் கீழ் குறைந்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு எரிபொருளின் விலையை நிர்ணயிக்கும் கச்சா எண்ணெய் விலை மிகவும் முக்கியம் . கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் கூறுகையில் கச்சா எண்ணெய் விலை இந்தியாவில் 88 டாலருக்கு கீழ் சென்றால் பெட்ரோல் டீசல் மீதான விலை உயர்வை குறைக்க முடியும் எனதெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது […]

You May Like