பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, CUET 2023 பதிவுகள் மற்றும் இளங்கலைப் படிப்புகளுக்கு சேர்க்கைக்கான விண்ணப்ப செயல்முறை விரைவில் அறிவிக்கப்படும்.
இது குறித்து UGC இன் தலைவர் மமிதாலா ஜெகதேஷ் குமார் கூறியதாவது; பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, CUET (UG) 2023க்கான பதிவு மற்றும் விண்ணப்ப செயல்முறை, மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற பங்கேற்கும் பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேர்வதற்கு ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்” என தெரிவித்தார்.
முன்னதாக, UG சேர்க்கைக்கான CUET 2023 பதிவுகள் பிப்ரவரி 2023 முதல் வாரத்தில் தொடங்கும் என்று கூறியிருந்தார். இருப்பினும், NTA இன்னும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.