CUET – UG நுழைவுத் தேர்வு மே 15 முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் ஜூன் 30ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
2022- 23ஆம் கல்வியாண்டு முதல் மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் நடத்தப்படும் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதேபோல், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிலையங்களும் க்யூட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.
12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் ஆன்லைன் மூலம் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. 2024ஆம் ஆண்டுக்கான CUET தேர்வு மே 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வின் முடிவுகள் ஜூன் 30ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு நேற்று (பிப்.27) தொடங்கி மார்ச் 26ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. க்யூட் (CUET Syllabus) நுழைவுத் தேர்வுக்கு பெரும்பாலும் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டம் அடிப்படையில் புத்தகத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்படுகின்றன.
CUET வினாத்தாள் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவு மொழி தேர்வாகவும், 2-வது பிரிவு பாடங்களுக்கான தேர்வாகவும், 3-வது பிரிவு பொது திறனுக்கான தேர்வாகவும் இருக்கும். வெளிநாடுகளில் உள்ள 26 நகரங்கள் உள்பட மொத்தம் 380 நகரங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் இத்தோவு நடத்தப்படவுள்ளது.
English Summary : CUET – UG’ Exam Application Start
Read More : Senthil Balaji | செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்..? சிறையிலிருந்து வெளியே வருகிறாரா..? இன்று தீர்ப்பு..!!