ஆந்திராவில் வளர்ப்பு தாயை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தத்து நாயக். இவரது தந்தையின் முதல் மனைவியான லட்சுமி பாய், சொந்த மகன் போல தத்து நாயக்கை சிறுவயது முதலேயே வளர்த்து வந்துள்ளார். சரியான வேலை இல்லாத தத்து நாயக், வீட்டினை தனக்கு எழுதி வைக்குமாறு தாய் லட்சுமி பாயை தொல்லை செய்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் வளர்ப்பு தாய் என்றும் பாராமல் லட்சுமி பாய்க்கு Current Shock கொடுத்துள்ளார்.அப்போதும் அவருக்கு வீட்டினை எழுதி தர லட்சுமி பாய் மறுத்துள்ளார். இந்நிலையில், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற தத்து நாயக், இரும்புக் கம்பியால் லட்சுமி பாயை கடுமையாக தாக்கியுள்ளார். இதில், பரிதாபமாக லட்சுமி பாய் உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தத்து நாயக்கை அதிரடியாக கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : இந்த விஷயங்களை மருத்துவர் உங்களிடம் சொல்லவே மாட்டார்..!! நீங்கள் தான் ஜாக்கிரதையா இருக்கணும்..!!