fbpx

பிக்பாஸ் டைட்டில் வின்னர்களின் தற்போதைய நிலை..!! அப்படினா சீசன் 7 வின்னருக்கும் இதே கதிதானா..?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் இறுதிக் கட்டத்தை எட்டி, டைட்டில் வின்னர் யாரென தெரிந்துவிடும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்களில் சிலர் மட்டுமே சிறந்த புகழ் நிலையை அடைகின்றனர். சிலர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே தமது பெயரை கெடுத்துக் கொள்கின்றனர். பிக்பாஸ் டைட்டில் வென்ற போட்டியாளர்கள் சினிமாவில் அடுத்தகட்டத்துக்கு நகர்வார்கள் என்று சொல்லப்படுகிறது.

இருப்பினும், இதுவரையில் இடம்பெற்ற 6 சீசன்களிலும் பங்குகொண்ட போட்டியாளர்கள், வெற்றியாளர்களில் பலர் சினிமாவில் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சொல்லப்போனால் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். முதல் சீசன் டைட்டில் வின்னர் ஆரவ், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்தார். அப்படம் தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

பிக்பாஸ் சீசன் 2 வின்னர் நடிகை ரித்விகா, மக்கள் மத்தியில் பெரிதளவில் பிரபலமடையவில்லை. பிக்பாஸ் சீசன் 3 வின்னர் முகன் ராவ் மற்றும் சீசன் 4 வெற்றியாளர் ஆரி அர்ஜுனன் இருவரும் முதன்மை ரோலில் நடித்த எந்த படமும் கடந்த ஆண்டுகளில் வெளிவரவில்லை. பிக்பாஸ் 5 டைட்டில் வின்னர் ராஜு வீட்டிற்குள் நல்ல பொழுதுபோக்காளராக இருந்தார். ஆனால், இவர் நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் வெளிவரவில்லை. அவரை பற்றியும் பெரிதளவில் தகவல் இல்லை.

அதேபோல் பிக்பாஸ் 6 டைட்டில் வின்னர் அசீம். பிக்பாஸ் வெற்றிக்கு பின் இவரும் என்ன செய்கிறார் என இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் மேலும் பிரபலம் அடையாளம், பட வாய்ப்புகள் குவியும் என்று எண்ணிய நட்சத்திரங்களின் பரிதாப நிலைமை சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இதேவேளை, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண், கவின், ரியோ, சாண்டி, தர்ஷன், ஷிவானி, ஜனனி போன்றோர் சினிமாவில் ஜொலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

"ஓரினச்சேர்க்கை உல்லாசம்.." நண்பன் கொடூர கொலை.! இளைஞர் தற்கொலை.! நடந்தது என்ன.?

Wed Jan 10 , 2024
ஓரினச்சேர்க்கையாளராக இருந்த நபர் தனது நண்பனை கொலை செய்து விட்டு தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ்(25). இவருடன் வாஞ்சிநாதன் என்ற நபர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார். நண்பர்களாக தொடங்கிய இவர்களது பழக்கம் நாளடைவில் தன் பாலின காதலாக மாறியிருக்கிறது. லோகேஷும் வாஞ்சிநாதனும் அடிக்கடி தனிமையில் […]

You May Like