தமிழ் சினிமாவின் 90-களில் வெளியான படங்களில் இன்றும் பேசப்படும் திரைப்படம் தான் நாட்டாமை. பாடல் முதல் காமெடி வரை இந்த படத்தின் காட்சிகள் இன்றும் மக்களால் பேசப்படும் ஒன்றாகும். கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய இந்த படத்தில் சரத்குமார், மீனா, குஷ்பு, விஜயகுமார், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலர் நடித்துள்ளனர். நாட்டாமை படத்தில் செந்தில் தந்தையாகாவும், கவுண்டமணி மகனாகவும் இவர்களுக்கு இடையே நடக்கும் காமெடி இன்றும் பேமஸ்.
கவுண்டமணிக்கு பெண் பார்க்க போகும் இடத்தில உள்ள பெண்களிடம் சில்மிஷம் காட்டும் தந்தை செந்திலை பார்த்து, ‘டேய் தகப்பா..’ என்று கவுண்டமணி கோபப்படும் காட்சிகளை இன்று பார்த்தாலும் வயிறு குலுங்க சிரிப்போம். அப்படி நாட்டாமை படத்தின் மிக்சர் காமெடி இன்று பல மீம்களுக்கு தீனிபோட்டு வருகிறது. அந்த காட்சியில், பெண் பார்க்க செல்லும் கவுண்டமணிக்கு பெண்ணை மிகவும் பிடித்து விடும். எல்லாம் ஓகே ஆகி வரும் சமயத்தில் செந்தில் பிளேஷ்பேக் சென்று பெண்ணின் தாயுடனான தொடர்பை சொல்ல, கடைசியில் பார்க்கப்போன பெண் கவுண்டமணிக்கு தங்கை முறையாகிவிடும்.
இந்த காமெடியில் மஞ்சள் புடவை கட்டி வரும் அந்த பெண்ணை நினைவிருக்கிறதா? அந்த பெண்ணின் பெயர் கீர்த்தி நாயுடு. சேதுபதி ஐபிஎஸ், இந்து, மே மாதம், சுல்தான் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தனது சமூக வலைதள பக்கங்களில் புடவையில் கவர்ச்சி காட்டும் புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவரின் ரீசென்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.