திருப்பதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியின் சம்மதத்துடன் டிக்டாக் பிரபலத்தை திருமணம் செய்து ஒரே வீட்டில் வாழ்க்கை நடத்தி வந்த நிலையில் கணவன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகின்றது.
திருப்பதி அம்பேத்கார் நகரைச் சேந்தவர் கல்யாண். இவர் சமீபத்தில் காதலித்து விமலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.இருவரும் மகிழ்ச்சியாக இருந்த நிலையில் நித்யா என்ற பெண் கல்யாண் வீட்டுக்கு வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். முதலில் அமைதி காத்த விமலா . நித்யா தொடர்ந்துவற்புறுத்தியதால் நானும் அதே வீட்டில்தான் இருப்பேன் என சத்தியம் வாங்கிக் கொண்டு தன் கணவனுக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தார்.
இந்த தகவல் சமூக வலைத்தலங்களில் வேகமாக பரவியது. இதனால் 80ஸ் 90ஸ் கிட்ஸ்களின் வயிற்றெரிச்சலையும் பெற்றது இந்த ஜோடி. ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்த நிலையில் ஒரு வாரத்திலேயே மாப்பிள்ளை தலைமறைவாகியுள்ளார். இது குறித்து கேட்டபோது 2 நாட்களிலேயே சக்கலத்திகளுக்குள் அடிக்கடி சண்டை வந்ததாம். நிம்மதியே போச்சு என புலம்பித்தள்ளியுள்ளார். இதனால் தாக்கு பிடிக்க முடியாத நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டாராம். சமூக வலைத்தலங்களில் இன்று இதுதான் ஹாட் டாக்காக உள்ளது.