fbpx

வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டு..!! 17 செயலிகளை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள்..!!

வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடியதாக 17 செயலிகளை ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுப்பதன் மூலம் அவர்களது தகவல்களை திருடி விற்பனை செய்ததாக 17 செயலிகளை கூகுள் நிறுவனம் கண்டுபிடித்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட 17 செயலிகளும் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகள் வாடிக்கையாளர்களை உளவு பார்த்ததும் தெரியவந்துள்ளது.

வாடிக்கையாளர்களின் செல்போனில் இருக்கும் ஏராளமான தகவல்களை இந்த செயலிகள் திருடி முறைகேடாக பயன்படுத்தியுள்ளன. இவை பெரும்பாலும் கடன் அளிக்கும் நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாட்டு மக்களை குறிவைத்து இந்த நிறுவனங்கள் இயங்கியதாகவும், இதையடுத்து 17 செயலிகள் முற்றிலும் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Chella

Next Post

'30 ஆண்டுகளுக்கு பாஜகவை எதிர்த்து போராடுவேன்’..!! பதவிநீக்கம் செய்யப்பட்ட எம்பி மஹுவா மொய்த்ரா பேட்டி..!!

Fri Dec 8 , 2023
எனது பதவியை பறிப்பதன் மூலம் அதானி விவகாரத்தை மறைக்க முடியாது என பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராக கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹீராநந்தானியிடம் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே புகார் அளித்தார். இந்த புகாரை நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு இதுகுறித்து விசாரித்து […]

You May Like