இந்தியாவில் பொதுவாகவே முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்கள் என பல முக்கிய நாட்களில் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில், தற்போது ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட மொத்தம் 14 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் அதற்கு ஏற்றது போல வங்கி தொடர்பான வேலைகளை திட்டமிட்டு முன்கூட்டியே முடித்துக் கொள்ளுங்கள்…
ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை பட்டியல்…
ஆகஸ்ட் 8 – டெண்டாங் லோ ரம் ஃபாட் (கேங்டாக்கில் வங்கி இல்லை)
ஆகஸ்ட் 12 – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை
ஆகஸ்ட் 13 – மாதத்தின் இரண்டாவது ஞாயிறு
ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம் (அகர்தலா, அகமதாபாத், ஐஸ்வால், பேலாப்பூர், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டேராடூன், காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத் – ஆந்திரப் பிரதேசம், ஹைதராபாத் – தெலுங்கானா, இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொச்சி, கோஹிமா, கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பனாஜி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம் சுதந்திர தினத்திற்காக)
ஆகஸ்ட் 16 – பார்சி புத்தாண்டு (பேலாபூர், மும்பை மற்றும் நாக்பூரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)
ஆகஸ்ட் 18 – ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி (கௌஹாத்தியில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)
ஆகஸ்ட் 20 – மூன்றாவது ஞாயிறு
ஆகஸ்ட் 26 – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை
ஆகஸ்ட் 27 – மாதத்தின் நான்காவது ஞாயிறு
ஆகஸ்ட் 28 – முதல் ஓணம் (கேரளாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)
ஆகஸ்ட் 29 – திருவோணம் (கேரளாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)
ஆகஸ்ட் 30 – ரக்ஷா பந்தன் (ஜெய்ப்பூர் மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)
ஆகஸ்ட் 31 – ரக்ஷா பந்தன்