fbpx

வாடிக்கையாளர்களே..!! ஜனவரியில் 14 நாட்கள் வங்கிகள் இயங்காது..!! ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு..!!

அடுத்தாண்டு (2023) ஜனவரி மாதம் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி. அதன்படி, வெளியிட்ட பட்டியலில் சில விடுமுறை நாட்கள் உள்ளூர் விடுமுறைகள் ஆகவும் உள்ளது. இந்த விடுமுறைகள் சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். அது தவிர ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மற்றும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளும் வங்கிகள் மூடப்படுவது வழக்கம்.

வாடிக்கையாளர்களே..!! ஜனவரியில் 14 நாட்கள் வங்கிகள் இயங்காது..!! ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு..!!

மொத்தம் 14 நாட்கள்…

ஜனவரி 1, 2023 (ஞாயிறு) : புத்தாண்டு தினம், ஞாயிறு விடுமுறை

ஜனவரி 2, 2023 (திங்கட்கிழமை) : புத்தாண்டு கொண்டாட்டம், மிசோரம்

ஜனவரி 5, 2023 (வியாழன்) : குரு கோவிந்த் சிங் ஜெயந்தி, ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் வங்கி விடுமுறை

ஜனவரி 8, 2023 (ஞாயிறு) : ஞாயிறு வங்கி விடுமுறை

ஜனவரி 11, 2023 (புதன்கிழமை) : மிஷனரி தினம், மிசோரம்

ஜனவரி 14, 2023 (சனிக்கிழமை) : 2-வது சனிக்கிழமை வங்கி விடுமுறை

ஜனவரி 15, 2023 (ஞாயிறு) : ஞாயிறு வங்கி விடுமுறை

ஜனவரி 22, 2023 (ஞாயிறு) : ஞாயிறு வங்கி விடுமுறை

ஜனவரி 23, 2023 (திங்கட்கிழமை) : திரிபுரா மற்றும் மேற்கு வங்கத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி வங்கி விடுமுறை

ஜனவரி 25, 2023 (புதன்கிழமை) : மாநில தினம், இமாச்சலப் பிரதேசம்

ஜனவரி 26, 2023 (வியாழன்) : குடியரசு தினம்

ஜனவரி 28, 2023 (சனிக்கிழமை) : 4-வது சனிக்கிழமை வங்கி விடுமுறை

ஜனவரி 29, 2023 (ஞாயிறு): வங்கி விடுமுறை வார இறுதி

ஜனவரி 31, 2023 (திங்கட்கிழமை) : அசாமில் மீ-டேம்-மீ-ஃபை (Me-Dam-Me-Phi) வங்கி விடுமுறை

Chella

Next Post

ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு..!! பிற்பகலுக்குப் பிறகு மலையேற அனுமதியில்லை..!! தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு..!!

Thu Dec 22 , 2022
சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சபரிமலையில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில், தினசரி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஆன்லைன் முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பார்ட் புக்கிங் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இந்நிலையில், […]
ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு..!! பிற்பகலுக்குப் பிறகு மலையேற அனுமதியில்லை..!! தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு..!!

You May Like