fbpx

வாடிக்கையாளர்களே..!! இந்த 3 நாட்களும் வங்கிகள் இயங்காது..!! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு..!!

நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு வருகின்றன. வங்கிகளுக்கு எந்தெந்த நாட்கள் விடுமுறை என்ற அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், ஜூன் மாதத்தில் மட்டுமே வார இறுதி நாட்களையும் சேர்த்து மொத்தம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பக்ரீத் பண்டிகை முன்னிட்டு எந்தெந்த வங்கிகளுக்கு விடுமுறை என்பது குறித்த அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், பக்ரீத் பண்டிகை முன்னிட்டு வருகிற ஜூன் 28ஆம் தேதி மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், கேரளா மற்றும் ஸ்ரீநகரிலுள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 29ஆம் தேதி திரிபுரா, குஜராத், மிசோரம், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், சண்டிகர், தமிழ்நாடு, உத்தரகாண்ட், அசாம், ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, மணிப்பூர், ராஜஸ்தான், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர், உத்தரப் பிரதேசம், வங்காளம், புது தில்லி, கோவா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மேகாலயா, ஹிமாச்சல் பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள வங்கிகள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து ஜூன் 30ஆம் தேதி மிசோரம் மற்றும் ஒடிசாவில் உள்ள வங்கிகள் மூடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் மொபைல் பேங்கிங் மற்றும் வாட்ஸ்அப் வங்கி சேவைகள் அனைத்தும் தடையின்றி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

மாணவர்களே..!! இனி மாலை நேர வகுப்புகள் கட்டாயம்..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

Tue Jun 27 , 2023
தமிழகத்தில் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கோடை விடுமுறைக்கு பின்னர் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் கடந்த ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மழலையர் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கடந்த ஜூன் 14ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கி […]

You May Like