சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் நாட்டில் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ”பான் கார்டுகளை அப்டேட் செய்யாவிட்டால் வங்கிக் கணக்குகள் நீக்கப்படும்” என்பது கொள்ளையர்களும், ஏமாற்றுக் காரர்களும் வழக்கமாக பயன்படுத்தும் மெசேஜ்.
அப்படியான மெசேஜ்களில் வரும் லிங்க்களை யாரும் க்ளிக் செய்ய வேண்டாம் என்று ஹெச்.டி.எஃப்.சி வங்கி எச்சரித்துள்ளது. அதில் கேட்கும் தகவல்களை நீங்கள் உள்ளீடு செய்தால் அதன்மூலம் உங்களது தனிப்பட்ட தகவல்களையும், பணத்தையுமே கூட கொள்ளையடிக்க வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.