ஆகஸ்ட் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த மாதம் மொத்தம் 13 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாகும். விடுமுறை நாட்களைக் கருத்தில் கொண்டு, உங்கள் வங்கி பணிகளை முன்கூட்டியே திட்டமிடுவது முக்கியம். ஆகஸ்ட் மாதத்தில் வரும் வங்கி விடுமுறைகள் எப்போது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஆகஸ்ட் 2024 : வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல்
ஆகஸ்ட் 3 – கேர் பூஜை (அகர்தலாவில் வங்கிகளுக்கு விடுமுறை)
ஆகஸ்ட் 4 – நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 8 – டெண்டோங் லோ ரம் ஃபாட் (காங்டாக்)
ஆகஸ்ட் 10 – இரண்டாவது சனிக்கிழமை நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 11 – நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 13 – தேசபக்தர் தினம் (இம்பால்)
ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம் (நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை)
ஆகஸ்ட் 18 – நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 19 – ரக்ஷ பந்தன் ( திரிபுரா, குஜராத், ஒடிசா, உத்தரகாண்ட், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் விடுமுறை)
ஆகஸ்ட் 20 – ஸ்ரீநாராயண குரு ஜெயந்தி (கொச்சியில் விடுமுறை)
ஆகஸ்ட் 24 – 4-வது சனிக்கிழமை (நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை)
ஆகஸ்ட் 25 – நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 26 – கிருஷ்ண ஜெயந்தி (தமிழ்நாடு, குஜராத், ஒடிசா, சண்டிகர், உத்தரகண்ட், சிக்கிம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், ஜம்மு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேகாலயா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஸ்ரீநகர் ஆகிய மாநிலங்களில் விடுமுறை)