fbpx

சுங்கச் சாவடி கட்டணம்..!! அதிரடி மாற்றங்கள்..!! மத்திய அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!

நாட்டில் சுங்கச்சாவடிகள் மூலம் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கு முன்பாக இந்தியாவில் 26 பசுமை வழிச் சாலைகள் அமைக்கப்படும். இந்த சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு சுங்க கட்டணம் வசூலிப்பதில் புதிய விதிகள் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள சாலைகள் தரத்துக்கு ஈடாக இந்திய சாலைகளும் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதிலும் பெரிய மாற்றம் வரப்போவதாக நிதின் கட்காரி தெரிவித்திருக்கிறார். சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த நீண்ட நேரம் வாகனங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்த நிலையில், பாஸ்ட் டேக் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் மூலம் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணம் கழிக்கப்பட்டதால் வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் குறைந்தது. இதேபோல், தற்போது வாகனங்களில் ஜிபிஎஸ் வசதி மூலம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படும் முறையும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தும் பெரும் சுமை குறையும் என்று கூறப்படுகிறது. சமீபத்திய நம்பர் பிளேட் சார்ந்த கட்டண வசூலிக்கும் முறையையும் அறிமுகப்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.

Chella

Next Post

சாதியால் காதலை ஏற்க மறுத்த பெற்றோர்..!! ஆத்திரத்தில் காதலியை நடுரோட்டில் வைத்து காதலன் செய்த செயல்..!!

Wed Mar 1 , 2023
ஆந்திர மாநிலம் காக்கி நாடா பகுதியைச் சேர்ந்தவர் லீலா என்ற இளம்பெண். பட்டதாரியான இவர் பெங்களூருவில் முருகேஷ் பால்யா பகுதியில் உள்ள ஒமேகா கெல்த்கேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரும், டோம்லூரில் உள்ள லாஜிஸ் ஹெல்த் கேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தினகர் என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், காதல் விவகாரம் குறித்து லீலா தனது பெற்றோரிடம் தெரிவித்த போது, சாதியை காரணம் காட்டி திருமணத்திற்கு […]

You May Like