fbpx

கள்ளக்காதலியுடன் கட்டிலில் உல்லாசம்..!! சரியான நேரத்தில் என்ட்ரி கொடுத்த மனைவி..!! 2 பேரையும் வெளுத்து வாங்கிய வீடியோ..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் விவேக். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே, கடந்த சில மாதங்களாகவே, விவேக்கின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எப்போதும் எதோ ஒரு காரணத்தை கூறி வெளியே சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தாராம் விவேக்.

இதனால் கணவனின் நடத்தை மீது சந்தேகமடைந்துள்ளார் மனைவி. இதைத்தொடர்ந்து கணவரை உண்ணிப்பாக கண்காணிக்க தொடங்கியுள்ளார். சம்பவத்தன்று வெளியே சென்று வருவதாக கணவர் புறப்பட்டு சென்ற நிலையில், மனைவி அவரை உறவினர்களுடன் பின்தொடர்ந்து சென்றிருக்கிறார். மனைவியின் சந்தேகத்தை உறுதி செய்யும் வகையில், கணவர் பந்த்ராம் பகுதியில் உள்ள பெண் ஒருவரின் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

அங்கு தனது தோழியுடன் விவேக் உல்லாசமாக இருந்த நிலையில், உறவினர்களுடன் விவேக்கின் மனைவி கணவரை பிடித்து சரமாரியாக அடித்துள்ளார். மேலும், விவேக்கின் தோழிக்கும் தர்ம அடி கொடுக்கப்பட்டது. பின் காவல் நிலையத்தில் விவேக் ஒப்படைக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், ஸ்பாவுக்கு சென்றுவந்தபோது இளம்பெண்ணுடன் பழக்கத்தை ஏற்படுத்திய விவேக், பின்னாளில் அவருடன் கள்ளக்காதல் உறவிலும் இருந்து வந்துள்ளார். இதனால் அவ்வப்போது குடும்பத்தினரிடம் தனது மனைவியை விவாகரத்து செய்துவிடுவேன் எனவும் கூறியிருக்கிறார். மனைவி தனது கணவர் மற்றும் அவரின் புதிய காதலியை புரட்டியெடுத்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read More : இனி ‘QR’ கோடு மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்..!! எப்படி தெரியுமா..? விரைவில் தமிழ்நாடு முழுவதும் அறிமுகம்..!!

English Summary

Family Brutally Thrashes Cheating Husband Caught With Another Woman; Viral Video Draws Reaction

Chella

Next Post

12 ஆயிரம் ஊழியர்களை புதிதாக பணியமர்த்த விப்ரோ திட்டம்..!!

Sat Jul 20 , 2024
Wipro headcount up, company to hire up to 12K freshers this fiscal

You May Like