fbpx

இந்தியாவில் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்!… வாட்ஸ் அப் மூலம் பணம் பறிக்கும் கும்பல்!… தடுக்கும் வழிமுறைகள்!

அதிகரித்து வரும் வாட்ஸ் அப் சைபர் குற்ற மோசடியில் இருந்து வாட்ஸ் அப் பயனர்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் சில வழிமுறைகளை பார்க்கலாம்.

ஆன்லைன், ஸ்மார்ட்போன் வழியாக மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பலருக்கு சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் அல்லது வீட்டில் இருந்து வேலை செய்யும் பணிகள் குறித்த செய்திகள் வாட்ஸ் அப்பில் வலம் வருகின்றன. இதுவும் மோசடி கும்பலின் பண பறிக்கும் முயற்சிகளில் ஒன்றாகும். சர்வதேச எண்களில் இருந்து வாட்ஸ் அப் செயலி மூலம் பலருக்கு மோசடி அழைப்புகள் வந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்திய வாட்ஸ் அப் பயனர்களுக்கு கடந்த சில வாரங்களாக வெளிநாட்டு எண்ணில் இருந்து, மோசடி அழைப்புகள் வரத் தொடங்கின. இதையடுத்து, வாட்ஸ் அப் நிறுவனம் குறிப்பிட்ட எண்களை பிளாக் செய்யுமாறும், ரிப்போர்ட் செய்யுமாறும், பயனர்களை அறிவுறுத்தியது.

வாட்ஸ் அப்பில் வரும் இந்தச் செய்திகள், போலியான பகுதி நேர வேலை என கூறி, அனுப்பும் லீங்கை க்ளிக் செய்ய வலியுறுத்தப்படும். அப்போது, அதனை க்ளிக் செய்தால், தங்களது பணம் பறிபோகிவிடும். சமீப காலமாக பலரும் பல லட்சங்களை இழந்து உள்ளனர். மக்களை ஏமாற்றி, உடனடி நமது செல்போன் பயன்பாடுகளைப் பயன்படுத்தும் மோசடியின் ஒரு பகுதி இதுவாகும். இந்த மோசடி என்ன, அதை எவ்வாறு தவிர்ப்பது மற்றும் பாதுகாப்பாக எப்படி இருப்பது என்பதை பார்க்கலாம்.

உலகெங்கிலும் உள்ள மோசடி கும்பல் வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் போன்ற செய்தியிடல் பயன்பாடுகள் மூலம் பெரும்பாலும் இந்தியர்களை குறிவைத்து வருகின்றனர். கடந்த சில வாரங்களில், நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் மற்றும் செய்திகளைப் பெறுவதாக புகார் அளித்துள்ளனர். இந்த அழைப்புகள் மற்றும் செய்திகள், ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.பல சந்தர்ப்பங்களில், பல வாட்ஸ் அப் பயனர்கள் மோசடி செய்பவர்களிடமிருந்து அழைப்புகள் அல்லது செய்திகளைப் பெற்ற பிறகு, தனது வங்கிகணக்கில் உள்ள பணத்தை இழந்துள்ளனர். இந்த மோசடி சம்பவங்களானது, மத்திய அரசு ஆலோசனை வழங்கும் அளவுக்கு மிகப்பெரிய அளவில் நாளுக்கு நாள் வளர்ந்து நிற்கின்றன.

சர்வதேச எண்களில் இருந்து வரும் அழைப்புகள் மற்றும் செய்திகள் குறித்து இந்திய வாட்ஸ்அப் பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டு வருகின்றனர். இந்த மோசடி அழைப்புகளில் பெரும்பாலானவை +251 (எத்தியோப்பியா), +60 (மலேசியா), + 62 (இந்தோனேசியா), +254 (கென்யா), (+84) வியட்நாம் ஆகிய எண்களில் இருந்து தொடங்குகின்றன.சமீபகாலமாக நிலைமையின் தீவிரத்தைப் உணர்ந்து, வாட்ஸ்அப் நிறுவனம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதுதொடர்பாக அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது. பயனர்கள் மோசடி அழைப்புகளை உடனடியாகத் தவிர்த்து, அதுகுறித்து புகாரளிக்க வேண்டும் என்றும் வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்குரிய வாட்ஸ் அப் எண்களை முடக்கவும், புகாரளிக்கவும் வாட்ஸ் அப் வசதிகளை வழங்கி வருகிறது.

Kokila

Next Post

உங்க போனில் இந்த ஸ்கிரீன் ரெக்கார்டிங் ஆப் இருக்கா?... உடனே அன்இன்ஸ்டால் செய்யுங்கள்!... Google ரெட் அலர்ட்!

Sun May 28 , 2023
கூகுள் பிளே (Google Play) ஸ்டோரில் இருந்த ஒரு ஸ்கிரீன் ரெக்கார்டிங் (Screen Recording App) ஆப் மூலம் யூசர்கள் உளவு பார்க்கப்பட்டதை கூகுள் (Google) நிறுவனம் கண்டறிந்து, அந்த ஆப்பை பிளே ஸ்டாரில் இருந்து நிரந்தரமாக நீக்கிவிட்டது. இருப்பினும், அந்த ஆப் 50,000 யூசர்களிடம் இருப்பதால், அவர்கள் ஆபத்தில் சிக்க வாய்ப்புள்ளது.ஒருவேளை அந்த ஆப் உங்களிடம் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டிராய்டு […]

You May Like